கரூர் செய்தியாளர் மரியான் பாபு
புனித வெள்ளி சிலுவைபாதை
கரூர் மாவட்டம் பசுபதிபாளையத்தில் அமைந்துள்ள புனித கார்மேல் அன்னை ஆலயத்தில் பிப்ரவரி மாதம் 18தேதி முதல் கிறிஸ்தவ தவகாலம் ஆரம்பமானது பின்னர் மார்ச் 29ம் தேதி குருத்தோலை ஞாயிறு பவனி நடைபெற்றது. கிறிஸ்தவர்கள் பலர் பங்கேற்றனர்.
அதனடிப்படையில் ஏப்ரல் 3ம் தேதியான கரூரை அடுத்த பசுபதிபாளையம் புனித கார்மேல் அன்னை ஆலயத்தில் பங்குத்தந்தை ஜோசப் டேவிட் தலைமையில்
தவகால மெளன ஆராதனை மற்றும் சிலுவைபாதை நிகழ்வு நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் ஏராளமான கிறிஸ்தவர்கள் ஜெபம் செய்து சிலுவை பாதையில் பங்கேற்றனர்.பின்னர் அன்பின் விருந்து நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஆலையத்தின் பங்கு மக்கள்,பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.