காரமடை எஸ்விஜிவி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மழலையர் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இவ்விழாவில் 108 மழலையர்களுக்கு வெகுசிறப்பாக பட்டமளிப்பு நடைபெற்றது. UKG வகுப்பு மாணவர்கள் தங்களது மழலைச் சொற்களால் நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கியது காண்போரை வியப்பில் ஆழ்த்தியது.
சிறப்பு விருந்தினராக டாக்டர் சௌமியா வதனா (தலைமை மருத்துவ அதிகாரி, சௌமியா மருத்துவமனை, காரமடை) அவர்கள் கலந்து கொண்டு பெற்றோர்களுக்கு குழந்தை பராமரிப்பு, குழந்தை வளர்ப்பு முறை போன்ற பல்வேறு அறிவுரைகள் மற்றும் வழிகாட்டுதல்களையும் வழங்கினார்.
விழாவை முன்னிட்டு நடைபெற்ற சின்னஞ்சிறு குழந்தைகளின் நடனம் காண்போரை கவரும் விதமாக இருந்தது. விழாவில் எஸ்விஜிவி பள்ளியின் தாளாளர் டாக்டர் திரு.பழனிசாமி, முதல்வர் திருமதி.சசிகலா, அறங்காவலர் திருமதி.தாரகேஷ்வரி மற்றும் நிர்வாக அதிகாரி திரு.சிவ சதீஷ் குமார் ஆகியோர் உட்பட ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.