C K RAJAN
Cuddalore District Reporter
9488471235.
சிதம்பரம் தொகுதியில் சமூக நல்லிணக்கத்திற்காக பாடுபடுவேன்
சிதம்பரம் தொகுதியில் சமூக நல்லிணக்கத்துக்கா க பாடுபடுவேன் என்று சிதம்பரம் சட்டப் பேரவை தொகுதி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளரும், மனித நேய ஜன நாயக கட்சி தலைவருமான மு.தமிமுன்அன் சாரி தெரிவித்தார்.
அவர் சிதம்பரத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
பக்தியும், கல்வியும் ஒன்று சேர்ந்துள்ள இந்த நக ரத்தின் மேம்பாட்டிற்காக, சமூக நல்லிணக் கத்திற்காக பாடுபடுவேன். எனது கருத்தி யல், அரசியலில் பிழை இருந்தால் சுட்டிக் காட்டுங்கள். அதனை விட்டு விட்டு அபாண்டங்களை சுமத்தி, மதத்தையும், சாதியையும் வம்புக்கு இழுத்து கலவரங்களை தூண்டுவது நாகரிகமல்ல. அரசி யல் மீதும், கோட்பாடுகள் மீதும் விமர்சனம் செய்ய இயலாதவர் கள் சமூக வளைதளங்களில் எனக்கு எதிராகஅவதூறு பரப்பி வரு கின்றனர்.
அவதூறு பரப்புபவர்கள் நேரடியாக என்னிடம் வந் தால் நான் கருத்தியல் பூர்வமாக விவாதிக்க தயாராக உள்ளேன். சிதம்பரம் தொகுதியில் திமுக அமைச்சரான எம்ஆர்கே பன்னீர் செல்வம் முயற்சியால் ரூ.400 கோடிக்கு மேல் கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டம், கோயில் குளங்களை தூர் வாரி சீரமைக்கப்பட்டது உள்ளிட்ட பல்வேறு திட்டப்பணிகளை மேற்கொண்டுள்ளார்.
ஆதலால் நிச்சயம் வெற்றி பெறுவோம்.
சிதம்பரம் தொகுதியில் பொதுமக்களை தாக்கி அச்சுறுத்தி வரும் முதலைகளை பிடித்து அடைக்க முதலை பண்ணை அமைக்க நட வடிக்கை மேற்கொள்வேன், பரங்கிப்பேட்டை முட்லூர் பகுதியில் மல்லிகை மற்றும் முல்லை அரும்பு அதிகம் விளைச்சல் உள்ளதால் அங்கு சென்ட் தொழிற்சாலை மற்றும் ஏற்றுமதி சந்தை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். பரங்கிப்பேட்டை பகுதியில் பெண்கள் கல்லூரி தொடங்க நடவடிக்கை மேற்கொள்வேன். சிதம்பரம் அண் ணாமலைநகரில் உள்ள கடலூர் மாவட்ட அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையை உயர் பல்நோக்கு மருத்துவமனையாக மாற்ற சட்டப்பேரவையில் குரல் கொடுத்து உரிய நடவடிக்கை எடுப்பேன் என்றார் அவர்.
பேட்டியின் போது திமுகவைச் சேர்ந்த கிள்ளை பேரூராட்சி துணைத் தலைவர் கிள்ளை ரவீந்திரன், திமுக மாவட்ட பொறியா ளர் அணி அமைப்பாளர் அப்புசந்திரசேகர், முகமதுபைசல் உள் ளிட்டோர் உடனிருந்தனர்.