தென்காசி சட்டமன்றத் தொகுதி வேட்பாளரிடம் சுரண்டை பகுதி மக்களின் எதிர்பார்ப்பு என்ன?
சுரண்டை
நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரிடம் சுரண்டை பகுதியின் வளர்ச்சிக்கு தேவையான எதிர்பார்ப்புகள் என்ன? அவற்றை போட்டியிடும் வேட்பாளர்கள் நிறைவேற்றுவார்களா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது
தென்காசி மாவட்டத்தில் மிக முக்கியமான வர்த்தக நகரமாகவும் சுமார் 75 ஆயிரம் மக்கள் தொகை மற்றும் 37 ஆயிரம் வாக்காளர்கள் சுமார் 200 கிராமங்களுக்கு தாய் கிராமமாகும் தென்காசி சட்டமன்றத் தொகுதியின் வேட்பாளர்களின் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் அரசியல் கேந்திரமாக விளங்குகிறது.
ஆனால் சுரண்டை நகரின் வளர்ச்சிக்கு ஏற்ப அரசு அலுவலகங்கள் இல்லை அதனை நிறைவேற்ற தொடர் கோரிக்கைகள் விடுத்தும் இதுவரை கிடைக்கவில்லை அதனை நிறைவேற்றுவேன் என வாக்குறுதி அளிக்கும் வேட்பாளர்கள் அதனை நிறைவேற்றாததும் தொடர்கதையாகி வருகிறது
சுரண்டை மற்றும் ஊத்துமலை பகுதியில் உள்ள விவசாயிகள் நலன் கருதி இரட்டை குளம் ஊத்துமலை கால்வாய் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என 60 வருட கோரிக்கை கிடப்பில் போடப்பட்டது
சுரண்டை மற்றும் சுற்றுவட்டார பகுதி கிராம மக்கள் போக்குவரத்து வசதியில் தன்னிறைவு பெறவும் தொலை தூர பஸ் வசதி கிடைக்கவும், நிர்வாக வசதிக்காகவும், டீசல் மற்றும் டிரிப்புகளை சேமிக்கவும் வசதியாக அரசு பஸ் டெப்போ அமைக்க வேண்டும் என 40 வருடமாக தொடர் கோரிக்கை விடுத்தும் சுரண்டையில் அரசு பஸ் டெப்போ அமைக்கலாம் என போக்குவரத்து கழகத்தில் இருந்து கருத்துரு அனுப்பியும் அதற்கான இடம் பரிசீலனை செய்யப்பட்டும் இது வரை பஸ் டெப்போ அமைக்கபடவில்லை இந்த கோரிக்கை பலமுறை கிடப்பில் போடப்பட்டுள்ளது
அதேபோன்று சுரண்டையில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மட்டுமே செயல்படுகிறது ஆகவே படுக்கை வசதிகளுடன் கூடிய அரசு மருத்துவமனை அமைக்க வேண்டும் என தொடர்ந்து பல வருடங்களாக கோரிக்கை விடுத்தும் செயல்படுத்தப்படவில்லை ஏற்கனவே தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் சில மாதங்களுக்கு முன்பு தென்காசி மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வருகை தந்த போது முதலமைச்சரிடம் அரசு மருத்துவமனை அமைக்க வேண்டும் என பெண்கள் கோரிக்கை விடுத்தனர் முதலமைச்சர் அதனை நிறைவேற்றி தருகிறேன் என உறுதி கூறியது குறிப்பிடத்தக்கது
ஆகவே தற்போது தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை மருத்துவ கல்லூரி மருத்துவமனையாக தரம் உயர்த்தபடவுள்ள நிலையில் சுரண்டையில் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையாக அமைக்க வேண்டும் எனவும் அதற்கான இடவசதியை இப்பகுதி பொதுமக்களே தரவும் தயாராக உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
சுரண்டையை சுற்றியுள்ள போலீஸ் ஸ்டேசன்களை (சுரண்டை, வீரகேரளம்புதூர், சாம்பவர்வடகரை, ஆயக்குடி, சேர்ந்தமரம்) உள்ளடக்கி டிஎஸ்பி ஆபிஸ், போக்குவரத்து காவல் நிலையம், மகளிர் காவல் நிலையம், அமைக்க வேண்டும்
சுரண்டையில் போக்குவரத்து மோட்டார் வாகன ஆய்வாளர் அமைக்க வேண்டும் என தொடர் கோரிக்கை விடுத்து வந்த நிலையில் அது சுரண்டையில் அமைக்க பரீசீலனை செய்யப்பட்டும் சுரண்டையில் அமைக்கப்படவில்லை வேறு பகுதிக்கு திருப்பி விடப்பட்டது. ஆகவே பகுதி நேர மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் அமைக்க வேண்டும்
திருநெல்வேலியில் இருந்து ஆலங்குளம், சுரண்டை வழியாக சங்கரன்கோவிலுக்கு புதிய ரயில் பாதை அமைக்க 15 வருடங்களுக்கு முன்பு கடந்த காங்கிரஸ் ஆட்சி காலத்தில் பரிசீலனை செய்யப்பட்டது ஆனால் அதுகுறித்து எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை ஆகவே இதற்கான பணிகளை துவக்க வேண்டும்
சுரண்டை பகுதியின் வழக்குகளை விரைந்து விசாரணை நடத்த சுரண்டையில் சப்கோர்ட் அமைக்க வேண்டும்
சுரண்டையை சுற்றியுள்ள கிராம பஞ்சாயத்துகள் கீழப்பாவூர், ஆலங்குளம், கடையநல்லூர், தென்காசி, செங்கோட்டை, பஸ் வசதியே இல்லாத மேலநீலிதநல்லூர் ஆகிய யூனியன் பகுதிகளில் உள்ளன இதனால் இப்பகுதி மக்கள் யூனியன் ஆபிஸ் தொடர்பான பனிகளுக்கு சென்று வர சிரமப்படுகின்றனர் ஆகவே சுரண்டையை சுற்றியுள்ள கிராம ஊராட்சிகளை ஒருங்கிணைத்து சுரண்டையில் யூனியன் அலுவலகம் அமைக்க வேண்டும்
மேலும் சுரண்டையில் இருந்து நாகர்கோவில், தூத்துக்குடி, இராமேஸ்வரம், தேனி, போடி, குமுளி, மதுரை, கோவில்பட்டி, இருக்கன்குடி, கேரளா மாநிலம் கொல்லம், திருவனந்தபுரம், கர்நாடக மாநிலம் பெங்களூரு, ஆந்திரா மாநிலம் திருப்பதி ஆகிய பகுதிகளுக்கு பஸ் வசதி இல்லை அதனை இயக்க வலியுறுத்தியும் நடக்கவில்லை
ஏற்கனவே தென்காசி மாவட்டம் பிரிக்கப்பட்ட போது மாவட்டத்தின் மைய பகுதியான சுரண்டையில் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் அமைக்க வேண்டும்
எனவும் அதற்காக 30 ஏக்கர் இடத்தை இலவசமாக தர இப்பகுதி மக்கள் உறுதியளித்தும் அது குறித்து பரிசீலிக்கப்பட்டும் அமைக்கப்படாத நிலையில் பிற அலுவலகங்களாவது அமைக்கப்படும் என்ற இப்பகுதி மக்களின் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை
அதேபோன்று முதல்வரின் சாலை மேம்பாட்டு திட்டம் மூலம் ராஜபாளையத்தில் இருந்து சங்கரன்கோவில், வீரசிகாமணி, சுரண்டை வழியாக அத்தியூத்து வரை நான்கு வழிச் சாலையாக தரம் உயர்த்த வேண்டும்
சுரண்டையில் உள்ள வர்த்தக நிலையங்கள், மற்றும் தொழில் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களின் மருத்துவ வசதியை மேம்படுத்தும் வகையில் படுக்கை வசதிகளுடன் கூடிய தொழிலாளர் நல மருத்துவமனை அமைக்க வேண்டும்
என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை தேர்வு செய்யப்படும் வேட்பாளர்கள் நிறைவேற்ற வேண்டும் என எதிர்பார்ப்பில் உள்ளனர்