திருவாரூர் செய்தியாளர் வேலா செந்தில்,
திருவாரூர் கமலாலயம் வடக்கு கரையில் திருவாரூர் சட்டமன்ற தொகுதி அலுவலக திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.
காலை 10.00 மணிக்கு திருவாரூர் மேம்பாலத்தில் நிறுவப்பட்டுள்ள முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் சிலைக்கும், தந்தை பெரியார், மற்றும் பேரறிஞர் அண்ணா அவர்களின் சிலைக்கும் மாலைகள் அணிவித்து,பேரணியாக புறப்பட்டு,திருவாரூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மதசார்பற்ற கூட்டணியின் சட்டமன்ற வெற்றி வேட்பாளர் பூண்டி கே.கலைவாணன் அவர்கள் வேட்பு மனு தாக்கல் செய்தார்கள்.
அனைத்து கட்சி மாவட்ட செயலாளர்கள் மாவட்ட தலைவர்கள் முன்னணி தொகுதி பொறுப்பாளர்கள் ஏராளமான அனைத்து கட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்,மண்ணின் மைந்தர் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த போது எடுத்த புகைப்படம்,