கரூர் செய்தியாளர் மரியான் பாபு
அதிக தொகுதிகளில் வெற்றி பெறுவோம்-முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி..
கரூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ஆசி. தியாகராஜனை ஆதரித்து முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் கரூர் பழைய பேருந்து நிலைய ரவுண்டானா அருகில் புதிய தேர்தல் அலுவலகத்தை (பணிமனையை) திறந்து வைத்து பின்னர் காங்கிரஸ், வன்னியர் மக்கள் கட்சி,விசிக உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஆயிரக்கணக்காணோர் ஊர்வலமாக கரூர் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு சென்றனர்.
பின்பு வேட்பாளர் தியாகராஜன் தனது வேட்பு மனுவை கரூர் சட்டமன்ற தொகுதி தேர்தல் அலுவலர் சத்திய பாலகங்காதரனிடம் மனு தாக்கல் செய்தார். உடன் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி,கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி,விசிக மாவட்ட செயலாளர் இளங்கோ மற்றும் அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.
பிறகு செய்தியாளர்களை சந்தித்த செந்தில் பாலாஜி கரூர் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் ஆர்சித் தியாகராஜன் 50,000க்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் எனவும், 2021 சட்டமன்ற தேர்தலில் கரூர் மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டமன்ற தொகுதிகளிலும் திமுக வெற்றி பெற்றதைப் போலவே 2026 தேர்தலிலும் நான்கு தொகுதிகளும் வெற்றி பெறும் என்றார்.
எந்த அரசியல் தலைவர் நல்லது செய்வார்,எந்த அரசியல் கட்சி கூட்டணி மக்களுக்கு நல்லது செய்யும் என பொதுமக்கள் நன்கு தெரிந்து வைத்துள்ளார்கள். ஆகையால் 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் மதசார்பற்ற கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும் எனவும், நிச்சயம் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும் பெரும் என்றார்.
திமுக தலைவராக மு க ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு நடைபெற்ற அனைத்து தேர்தலிலும் தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறார். இதே போல 2026 தேர்தலிலும் 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் எதிரொலிக்கும் என்றும், கரூர் மேற்கு மண்டலத்தைப் பொருத்தவரை 2021 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதை விட கூடுதலான தொகுதிகளில் வெற்றி பெறும் என நம்பிக்கை தெரிவித்தார்.