தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420

திமுக கூட்டணி கொள்கை கூட்டணி, அதிமுக, பாஜக கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணி என மனித வள மேலாண்மை துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் சாடல்.

தாராபுரம்

திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் நகராட்சிக்கு உட்பட்ட தாராபுரம் பேருந்து நிலையம், சின்னக்கடை வீதி , பொள்ளாச்சி சாலை அலங்கியம் சாலை உள்ளிட்ட
30-வார்டு பகுதிகளில்,அமைச்சர் கயல்விழி செல்வராஜ் மற்றும் நகர் மன்ற தலைவர் பாப்பு கண்ணன் மற்றும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி நிர்வாகிகள் தாராபுரம் தொகுதி வேட்பாளர் மருத்துவர் இந்திராணியை ஆதரித்து உதய சூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர்.

வேட்பாளர் செல்லும் இடமெல்லாம் பட்டாசு வெடித்து, தாறை தப்பட்டை முழங்க உற்சாக வரவேற்பு அளித்தனர் தாராபுரம் பேருந்து நிலையத்தில் வாக்கு சேகரிக்க சென்ற வேட்பாளர் இந்திராணி அங்குள்ள குளிர்பான கடைக்குச் சென்று பேருந்து நிலையத்தில் பேருந்துகளுக்கு காத்திருந்தா பயணிகளுக்கு குளிர்பானங்களை வழங்கி வாக்கு சேகரித்தார்.

பரப்புரையில் கலந்து கொண்ட அமைச்சர் கயல்விழி செல்வராஜ் கூறுகையில், :-

திமுக கூட்டணி மக்கள் நலனுக்காக அமைந்துள்ள கொள்கை கூட்டணி ஆனால் அதிமுக பாஜக கூட்டணி என்பது சந்தர்ப்பவாத கூட்டணி கடந்த பாராளுமன்ற தேர்தலில், இரண்டு கட்சிகளும் சண்டை போட்டு பிரிந்து இருந்தார்கள்.

இப்போது சட்டமன்ற தேர்தலுக்காக இருவரும் ஒன்று சேர்ந்து மக்களை ஏமாற்ற கூட்டணி அமைத்துள்ளனர். பச்சோந்தி போல மாறி கொண்டு இருக்கும் அடிமை அதிமுக கூட்டணியை தமிழ் நாட்டை விட்டு விரட்டி அடிக்க திமுக தலைவரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைய நாம் அனைவரும் உதய சூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *