மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில், இந்து சமய அறநிலையத் துறை மூத்த தம்பதியருக்கு திருக்கோயில்களின் சார்பில் சிறப்பு செய்யப்பட்டது. மதுரை இணை ஆணையர் மண்டலத்தில் 70 வயது பூர்த்தி யடைந்த, ஆன்மீகத்தில் ஈடுபாடுள்ள மூத்த தம்பதியர்களுக்கு திருக் கோயில் களின் மூலம் சிறப்பு செய்வதற்கு இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர், சட்டமன்ற அறிவிப்பினை செயல்படுத்திடும் வகையில், இத்திருக்கோயிலில்திருக்கோயில் அறங்காவலர் குழுத் தலைவர், இணை ஆணையர்/ செயல் அலுவலர் சுரேஷ் , அறங்காவலர் ஆகியோரால் 70 வயது பூர்த்தியடைந்த மூத்த தம்பதியர் களுக்கு திருக் கோயில் சார்பில் பிரசாதங்கள் வழங்கப்பட்டு சிறப்பு செய்யப்பட்டது.

நிகழ்ச்சியில் இத்திருக்கோயில் அறங்காவலர் குழு தலைவர் ருக்மணி பழனிவேல்ராஜன், அறங்காவலர்கள் செல்லையா, இத்திருக்கோயில் சீனிவாசன், மீனா, இணை ஆணையர் சுரேஷ், நிர்வாக அதிகாரி, உதவி ஆணையர் செயல் அலுவலரின் நேர்முக உதவியாளர், திருக்கோயில் கண்காணிப்பாளர் கள், திருக்கோயில் பணியாளர்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *