திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வரதராஜன்பேட்டை மகா மாரியம்மன் ஆலயத்தில் சட்டப்பேரவை அறிவிப்பு 2025-26 அறிவிப்பு எண் 28 தமிழக அரசின் திருக்கோயில் சார்பில் 70 வயது பூர்த்தி அடைந்த மூத்த 5 தம்பதியர்களுக்கு சிறப்பு செய்தல் நிகழ்வு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி இந்துசமய அறநிலையத்துறை சார்பில் நடைபெற்றது.

நிகழ்வில் வலங்கைமான் மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் வீ.அன்பரசன், பேரூர் திமுக செயலாளர் பா.சிவநேசன், பேரூராட்சி மன்ற தலைவர் சர்மிளா சிவனேசன், பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் க.தனித்தமிழ்மாறன், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் க.செல்வம், ஆனந்த் குமார், ரம்ஜான் பீவி சிவராஜ் மற்றும் சிங்குதெரு ராஜேஷ், சதானந்தம், கோ.சண்முகசுந்தரம் யாதவ் மற்றும் தெரு வாசிகள் நலச் சங்கத்தினர், இளைஞர் நற்பணி மன்றத்தினர் ,

ஸ்ரீ பாடைகட்டி மகா மாரியம்மன் பக்தர்கள் சேவா சங்கத்தினர், ஆலய செயல் அலுவலர் கோ.கிருஷ்ணகுமார், தக்கார்/ ஆய்வர் க. மும்மூர்த்தி மற்றும் திருக்கோயில் பணியாளர்கள், பக்தர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். 5 தம்பதியர்களுக்கு சிறப்பு செய்யப்பட்டது.

நிகழ்வுக்கான ஏற்பாடுகளை ஆலய செயல் அலுவலர் கோ.கிருஷ்ணகுமார், தக்கார்/ஆய்வர் க. மும்மூர்த்தி மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் சிறப்பாக செய்து இருந்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *