திருத்துறைப்பூண்டி., ஏப்ரல்04
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் அனைத்து கட்சிகள் சார்பில் வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டு தீவிர பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி சார்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வெற்றி வேட்பாளர் கா.மாரிமுத்து இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.
அவருடன் திமுக காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முன்னதாக திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் இருந்து தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகம் வரை பேரணியாக சென்றனர்
இதில் திருத்துறைப்பூண்டி திமுக நகர செயலாளர் ஆர் எஸ் பாண்டியன், சிபிஎம் மாநில குழு உறுப்பினர் ஐ. வி. நாகராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.