முதுகுளத்தூர், ஏப்ரல்.4

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கான வேட்டு மனு தாக்கல் முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.


சசிகலா அணியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ராம்குமார் இன்று காலை ஆதரவாளர்களுடன் பசும்பொன்னில் தேவர் நினைவிடத்தில் ஆசி பெற்று முதுகுளத்தூர் தேர்தல் அலுவலகத்திற்கு வந்து வேட்புமனுவை தாக்கல் செய்தார். அதேபோல் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மலேசியா பாண்டியன் தனது கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் வந்து வேட்புமனு தாக்கல் செய்தார்.


மேலும் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) சார்பில் மலர் ஜெயா, வேட்பாளராக ஆகியோரும் இன்று தேர்தல் அதிகாரியிடம் தங்களது வேட்புமனுக்களை சமர்ப்பித்தனர்.

வேட்புமனு தாக்கலின் போது வேட்பாளர்களின் ஆதரவாளர்கள் திரளாக கலந்து கொண்டு உற்சாகமாக ஆதரவு தெரிவித்தனர். இதனால் முதுகுளத்தூர் பகுதி முழுவதும் தேர்தல் பரபரப்பு அதிகரித்துள்ளது.

வேட்புமனு தாக்கல் செய்யும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், அடுத்த சில நாட்களில் மேலும் பலர் வேட்புமனு தாக்கல் செய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *