தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420
மூலனூர் பகுதியில் அதிமுக சார்பில் செயல்வீரர்கள் கூட்டம் வேட்பாளர் சத்திய பாமா தலைமையில் நடைபெற்றது.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள மூலனூர் பகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சத்தியபாமா மூலனூர் பகுதியில் உள்ள கட்சி நிர்வாகிகளிடம் தீவிர வாக்கு சேகரித்தார் அப்போது மூலனூர் தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக செயல் வீரர்கள் கூட்டம் மாவட்ட கழக செயலாளர் மகேந்திரன் தலைமையில் மற்றும் மாநில அம்மா பேரவை துணைச் செயலாளர் முத்து வெங்கடேஸ்வரன் முன்னிலையில் நடைபெற்றது
இந்நிகழ்ச்சியில் மூலனூர் பகுதியில் தான் வெற்றி பெற்றவுடன் முருங்கைக்காய் பவுடர் தொழிற்சாலை மற்றும் முருங்கைக்காய்க்கு உரிய விலை கிடைக்க முயற்சி மேற்கொள்ளப்படும் எனவும் செங்காந்தள் மலருக்கு உரிய விலை தற்போது கிடைப்பதில்லை நான் வெற்றி பெற்றால் செங்காந்தள் மலரை அரசே கொள்முதல் செய்யப்படும் என உறுதி அளித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்
இந்நிகழ்ச்சியில் மூலனூர் ஒன்றிய கழகச் செயலாளர்கள் ராஜரத்தினம் மற்றும் செல்வகுமார் மற்றும் பேரூர் கழகச் செயலாளர்கள் வெற்றிவேல் மற்றும் லட்சுமண சாமி உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் சுமார் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.