மதுரை ரயில்வே கோட்டத்தில் ‘வந்தே மாதரம்’ தேசிய பாடலின் 150-வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது.தெற்கு ரயில்வேயின் மதுரை கோட்டம் சார்பில், நாட்டின் தேசியப் பாடலான வந்தே மாதரத்தின் 150-வது ஆண்டு நிறைவையொட்டி, மதுரை அரசரடி ரயில்வே மைதானத்தில் பொது மக்கள் பாடும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மதுரை கோட்ட மேலாளர் ஸ்ரீ ஓம்பிரகாஷ் மீனா நிகழ்ச்சியை தொடங்கி வைத்துப் பேசுகை யில், ‘நாட்டு மக்களை ஒன் றிணைக்கும் தேசத்தின் மீது அன்பைத் தூண்டும் பாடலாக வந்தே மாதரம் முக்கியத்துவமாக உள்ளது. இப்பாடலால் ஈர்க்கப்பட்ட ஒற்றுமை, தேசபக்தியின் செய்தியைப் பரப்புவதற்காக, இத்திட்டங்கள் ஆண்டு முழுவதும் தொடருகின்றன’ என்றார்.

இதில் கோட்ட ரயில்வே அதிகாரிகள் மற்றும் ரயில்வேபாதுகாப்புப்படையினர், காவல் துறையினர், பணியாளர்கள் மற்றும் ரயில்வே பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள், சாரணர்கள் மற்றும் பெற்றோர்கள் உள்ளிட்டோர் பங்கேற்று வந்தே மாதரம் பாடலை பாடினர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *