ஏப்ரல் 04.
நாமக்கல்.
நாமக்கல் சட்டமன்றத் தொகுதியில், அண்ணா புரட்சித் தலைவர் அம்மா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர் ஆதித்யன், நாமக்கல் வருவாய்க் கோட்டாட்சியர் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தனது வேட்பு மனு தாக்கல் செய்தார்.
நாமக்கல் மாவட்டத்தில் சட்டமன்ற பொது தேர்தலை முன்னிட்டு வட்டாட்சியர் அலுவலகங்கள் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்களில் வேட்டு மனு தாக்கல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
அதன்ஒருபகுதியாக, நாமக்கல் வருவாய்க் கோட்டாட்சியர் சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் வே. சாந்தியிடம், அண்ணா புரட்சித் தலைவர் அம்மா திராவிட முன்னேற்ற கழக வேட்பாளர் ஆதித்யன் வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அப்போது தேர்தல் உறுதிமொழி வாசித்து ஏற்றுக்கொண்டார்.
இந்த நிகழ்வில், அண்ணா புரட்சித் தலைவர் அம்மா திராவிட முன்னேற்றக் கழக மாவட்ட இளைஞரணி செயலாளர் வி. வெங்கடேசன், மாவட்ட இணை இளைஞரணி செயலாளர் மணிகண்டன், நகர இளைஞரணி செயலாளர் துரைராஜ் ஆகியோர் கலந்துகொண்டனர்.