திருவாரூர்., ஏப்ரல் 04

திருவாரூரில் உள்ள பாரதிய ஜனதா கட்சி அலுவலககூடத்தில் அதன் திருவாரூர் மாவட்டத்தலைவர் செல்வம் தலைமையில், திருவாரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பாரதிய ஜனதா கட்சி தேசிய, மாநில, மாவட்ட, மண்டல மையக்குழு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் திருவாரூர் சட்டமன்றத் தொகுதி உட்பட்ட 100க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் முன்னிலை வகித்து பேசிய முன்னாள் பாஜக மாவட்ட தலைவர் பேட்டை சிவா கூறும்போது…இன்றைக்கு திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு எதிரான ஒரு சூழல் தமிழ்நாடு முழுக்க நிலவிக் கொண்டிருக்கிறது.

அவர்களுக்கு விழக்கூடிய பல வாக்குகளை தமிழக வெற்றி கழகம், தமிழ்நாடு முழுவதும் பிரிக்கக் கூடிய வாய்ப்பு இருக்கிறது. நாம் தேர்தல் பணிகளை சிறப்பாக செய்தால் இந்த தேர்தலில் திருவாரூர் தொகுதி வெற்றி பெறும் என்று நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து சிறப்பு அழைப்பார்களாக கலந்து கொண்ட ஆந்திர மாநிலத் துணைத் தலைவர் சிவா நாராயணன் கூறும்போது… நாம் நல்ல அணுகுமுறையில் பொதுமக்களை சந்திக்க வேண்டும், என்றும் திமுகவினர் போன்று தவறான வார்த்தைகளை பயன்படுத்தாமல் நல்ல வார்த்தைகளை பயன்படுத்தி வாக்குகளை சேகரிக்க வேண்டும் என்றும், கூட்டணி கட்சிகளுடன் நல்ல நட்புறவுடன் இருக்க வேண்டும்.

திமுகவினருடைய வாக்குகளை வாங்கும் வகையில் செயல்பட வேண்டும் என்றும் ஆலோசனை வழங்கினார். மேலும் திமுகவிற்கு ஓட்டு போட்டால் நமது குழந்தைகள் எவ்வாறு பாதிக்கபடுவார்கள். அவர்களது வருங்கால தலைமுறைகள் எவ்வாறு பாதிக்கும் என்றும் மக்களிடையே எடுத்துச் சொல்லி வாக்குகளை சேகரிக்க வேண்டும் என்று நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *