சத்தியமங்கலம் ராஜீவ் நகர் ஜீவா மையத்தில் பட்டா போராட்ட ஆலோசனைக்கூட்டம் போ. ரவிச்சந்திரன் தலைமையில் சிபிஐ நகரச் செயலாளர் ஜ மேஷ் முன்னிலையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் முன்னாள் பவானிசாகர் சட்டமன்ற உறுப்பினர் பி.எல்.சுந்தரம் தலைமையில் சத்தியமங்கலம் நகரத்தில் ஆன்லைன் பட்டா பிரச்சனையால் 5000 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள பிரச்சனைக்கு தீர்வு காண, வருகின்ற 24.11.2025 திங்கட்கிழமை காலை 11.00 மணி அளவில் சத்தியமங்கலம் தாலூகா அலுவலகம் முன்பு, பொதுமக்கள் சார்பில் கண்டன போராட்டம் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது .

இதில் சமூக ஆர்வலர்கள் அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *