திருவாரூர் செய்தியாளர்
வேலா செந்தில்

கொரோனா காலத்தில் சுகாதார ஆய்வாளர் பணியாற்றிய சான்றிதழ் வழங்க காலதாமதம் ஏற்படுத்தி வரும் மாவட்ட சுகாதார சுகாதார துணை இயக்குநர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் ஈடுபட்டனர்.

திருவாரூர் மாவட்டத்தில் கடந்த கொரோனா காலத்தில் இருந்து தற்காலிக சுகாதார ஆய்வாளர் பணியில் 40 பேர் பணியாற்றி வருகின்றனர்.
தற்போது மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் மூலம் சுகாதார ஆய்வாளர் பணிகள் நிரப்பப்படுகிறது .இதில் கொரோனோ காலத்தில் பணியாற்றியவர்களுக்கு சிறப்பு மதிப்பெண்கள் வழங்கப்படுகிறது.

இதற்கான சான்றிதழ் வரை அந்தந்த மாவட்ட சுகாதாரத் துறை இயக்குனர் அலுவலக மூலமாக வழங்க உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் இந்த சான்று பெறுவதற்காக அலுவலகத்தில் கடந்த 10 தினங்களுக்கு மேலாக பலமுறை நேரில் கேட்டும் இதுவரை வழங்கப்படவில்லை இன்று வழங்கப்படும் என காலை முதல் சான்றிதழ் தருவதாக கூறி அலைத்து மாலையில் நாளை தருவதாக அலுவலர்கள் கூறியுள்ளனர் .

இதனால் அலுவலகம் முன்பு திடீரென அனைவரும் போராட்டத்தில் ஈடுபட்டனர் .
இதுகுறித்து மாவட்ட ஆட்சியருக்கு தகவல் தெரிவித்ததன் பேரில் உடனடியாக சான்றிதழ் வழங்க உரிய நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் விடுமுறையில் உள்ளதால் அவரது கையொப்பம் இருந்தால் மட்டுமே செல்லுபடியாகும் எனவே மாவட்ட சுகாதாரத் துறை இயக்குனர் கையொப்பமிட்டு நாளை காலைக்குள் வழங்க வேண்டுமென உத்திரவாதம் வழங்க கோரி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *