கரூர் மாவட்ட செய்தியாளர் மரியான் பாபு



கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் மேளதாளங்கள் முழங்க மாட்டு வண்டியில் ஊர்வலமாக வந்து வட்டாட்சியர் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்த கிருஷ்ணராயபுரம் திமுக வேட்பாளர் சி கே ராஜா கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் தனி சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் சி கே ராஜா தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.


கிருஷ்ணராயபுரம் பேருந்து நிலையத்திலிருந்து வட்டாட்சியர் அலுவலகம் வரை மேளதாளங்கள் முழங்க மாட்டு வண்டியில் ஊர்வலமாக வந்து தனது வேட்பு மனுவை தேர்தல் நடத்தும் அலுவலர் சிவக்குமாரிடம் வழங்கினார். அதனைத் தொடர்ந்து தேர்தல் உறுதிமொழி ஏற்றுக் கொண்டார்.


இந்த நிகழ்வில் கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திமுக மாவட்ட ஒன்றிய பேரூர் கழக நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *