புதிய அரசுக்கு வாழ்த்து மற்றும் அமைச்சரவை உருவாக்கத்தில் பிராந்திய முக்கியத்துவத்தை வலியுறுத்தி ஏ.கே. ராஜசேகர் அறிக்கை.


புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று, புதிய ஆட்சியை அமைக்கவுள்ள முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களுக்கு ஏ.கே.ஆர். தேசிய மக்கள் கட்சி சார்பில் அதன் தலைவர் ஏ.கே. ராஜசேகர் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.


மேலும், மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியைக் கருதி அமையவுள்ள புதிய அமைச்சரவை குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
“புதிதாகப் பொறுப்பேற்கும் அரசு, புதுச்சேரியின் அனைத்துப் பிராந்தியங்களையும் உள்ளடக்கிய சீரான வளர்ச்சியை வழங்க வேண்டும் என்பதே எமது விருப்பம்.

அந்த வகையில், அமைச்சரவை உருவாக்கத்தில் கீழ்க்கண்ட கோரிக்கைகளை மக்கள் நலன் கருதி அரசுக்கு முன்வைக்கிறோம் 1.நிதிப் பங்கீட்டில் சமநிலை: ஒரு தொகுதியை மட்டுமே கொண்ட பிராந்தியங்களைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சர் பதவி வழங்கும்போது, அந்தத் துறை சார்ந்த ஒட்டுமொத்த நிதியில் 40% முதல் 50% வரை அந்த ஒரு தொகுதிக்கே மடைமாற்றப்படும் சூழல் நிலவுகிறது.

இதனால் 29 தொகுதிகளில் வாழும் பெரும்பான்மை மக்கள் பாதிக்கப்படுகின்றனர். இந்தத் தவறு மீண்டும் நிகழாமல் இருக்க, 5 அமைச்சர் பதவிகளையும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பிராந்தியங்களுக்கு மட்டுமே வழங்க வேண்டும்.

  1. நிர்வாகத் தேக்கத்தைத் தவிர்த்தல்: புதுச்சேரியின் தலைமைச் செயலகம் மற்றும் அரசுத் துறைகள் இங்கேயே அமைந்துள்ள நிலையில், 600 முதல் 800 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஏனாம் மாஹே தொகுதிகளைச் சேர்ந்தவர்கள் அமைச்சராகும் போது நிர்வாகக் கோப்புகள் தேக்கமடைகின்றன. நிர்வாக வேகத்தை அதிகரிக்க புதுச்சேரி மற்றும் காரைக்கால் உறுப்பினர்களுக்கே அமைச்சரவையில் முன்னுரிமை அளிக்க வேண்டும்.
  2. வேலைவாய்ப்பு மற்றும் ஒப்பந்த உரிமைகள்: புதுச்சேரி மாநிலத்தின் 90 சதவீத மக்கள் தொகையையும் வருவாயையும் ஈட்டித் தரும் புதுச்சேரி-காரைக்கால் இளைஞர்களின் வேலைவாய்ப்பு மற்றும் ஒப்பந்த உரிமைகள் சமமாகப் பகிரப்பட வேண்டும். ஒரு தொகுதி அமைச்சர்களால் இந்த உரிமைகள் ஒரு குறிப்பிட்ட பகுதிக்குள் முடங்குவதைத் தவிர்க்க வேண்டும்.
  3. வாக்களித்த மக்களுக்கு நீதி: 95 சதவீத மக்கள் வசிக்கும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பிராந்தியங்களின் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்வதே வாக்களித்த மக்களுக்குச் செய்யும் உண்மையான நீதியாகும்.

  4. எனவே, முதல்வர் ரங்கசாமி அவர்கள் தலைமையிலான புதிய அரசு, ஒரு தொகுதியைச் சேர்ந்த பிராந்திய சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சரவையில் இடம் வழங்குவதைத் தவிர்த்து, 5 அமைச்சர் பதவிகளையும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கி மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியை உறுதி செய்ய வேண்டும்” என ஏ.கே. ராஜசேகர் வலியுறுத்தியுள்ளார். இச்செய்திகளை தங்கள் செய்தி பிரிவின் மூலம் சிறப்பான செய்தியாக வெளியிடுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். 🙏🙏🙏
    இப்படிக்கு,
    ஏ.கே. ராஜசேகர்
    நிறுவனர் & தலைவர்,
    ஏ.கே.ஆர்.தேசிய மக்கள் கட்சி.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *