கரூர் செய்தியாளர் மரியான் பாபு
கரூர் மல்யுத்த வீரர், வீராங்கனை சாதனை..
தமிழ்நாடு அமெச்சூர் மல்யுத்த சங்கம் சார்பாக 2வது 15 வயது உட் பட்டவர்க்கான தென்னிந்தியா மல்யுத்த சாம்பியன் ஷிப் 2026க்கான போட்டி 15,16,17 ஆகிய மூன்று நாட்கள் பாண்டிச்சேரியில் உள்ள ராஜீவ் காந்தி உள் அரங்கத்தில் நடைபெற்றது.
இப்போட்டியில் பாண்டிச்சேரி,தமிழ்நாடு,கேரளா,ஆந்திர பிரதேஷ், தெலுங்கானா, கர்நாடகா என ஐந்து மாநிலம் மற்றும் ஒரு யூனியன் கலந்து கொண்டனர். இதில் 160 க்கும் அதிகமான வீரர்கள் கலந்து கொண்டனர்.இதில் கரூர் மாவட்டத்தை சேர்ந்த கனிஷ்கா பெண்கள் 50கிலோ எடைப் பிரிவில் வெண்கல பதக்கமும்,கிஷோர் (கிரிகோ ரோமன்) 57 கிலோ எடைப் பிரிவில் வெண்கல பதக்கமும்,நிதீஷ் குமார்( ஃப்ரீ ஸ்டைல்) 75 கிலோ எடைப் பிரிவில் வெண்கல பதக்கமும்,கிரிநாத்(கிரிகோ ரோமன்) 44 கிலோ எடைப் பிரிவில் வெள்ளி பதக்கமும்,லத்தீஸ்(கிரிகோ ரோமன்) 62 கிலோ எடைப் பிரிவில் வெண்கல பதக்கமும்,வென்று கரூர் மாவட்டத்திற்க்கு பெருமை சேர்த்து உள்ளனர்.
இவர்களை பாராட்டும் வகையில் ஊர் மக்கள் சார்பாகவும்,கரூர் மாவட்ட மல்யுத்த சங்கம் சார்பாகவும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம் இந்நிகழ்ச்சி கரூர் மாவட்டம் மல்யுத்த சங்க செயலாளர் மு. ஜெகன் குமார் மூலம் பெறப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.உடன் அனைத்து மாநில மல்யுத்த மாணவர்கள், பயிற்ச்சியாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.