திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ராஜகோபாலசுவாமி அரசினர் கலை கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் ரவி கலந்து கொண்டு கல்லூரி சேர்ந்த இளங்கலை மற்றும் முதுகலை மாணவ மாணவிகள் 939 பேர்களுக்கு பட்டம் வழங்கி சிறப்புரையாற்றினார்.

அதனை தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய பல்கலைக்கழக துணைவேந்தர் ரவி… படிப்பு என்பது வயதை ஒத்ததல்ல எப்பொழுது வேண்டுமானாலும் படித்துக் கொண்டே இருக்கலாம் நிறைய விஷயங்களை படித்துக் கொண்டே இருங்கள் படித்தால் உங்களுடைய அறிவு மேம்படும் செல்போனின் பயன்பாட்டை தயவுசெய்து குறியுங்கள் அதில் என்ன பிரச்சனை உள்ளது என்பது இப்பொழுது உங்களுக்கு புரியாது.

தயவு செய்து செல்போனை முறையாக எதற்கு பயன்படுத்த வேண்டுமோ அதற்கு மட்டும் பயன்படுத்த வேண்டும் சோசியல் மீடியாவிற்குள் போகாதீர்கள் அந்த நேரத்தில் புத்தகம் வாசிப்பதில் கவனத்தை அதிகம் செலுத்துங்கள் அந்த நேரத்தில் அறிவு மேம்படும் உங்களுடைய திறனை வளர்த்துக் கொள்ளுங்கள் என்றார் .

இந்நிகழ்ச்சியில் கல்லூரி பேராசிரியர்கள் மாணவ மாணவிகள் அவர்களின் பெற்றோர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *