பாபநாசம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரித்துக் கொண்டிருக்கிறது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பாதுகாப்பு இல்லாத சூழலில், ஆட்சியாளர்கள் ஆட்சி செய்து கொண்டிருக்கிறார்கள்..
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் ஜி.கே.வாசன் குற்றச்சாட்டு..
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கபிஸ்தலம் கடைவீதியில் அதிமுக வேட்பாளர் துரை.சண்முகபிரபுவை ஆதரித்து, இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்க ஆதரவு கேட்டு ஜி.கே.வாசன் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்..
அப்போது அவர் பேசும் போது, தமிழகத்தின் ஆட்சி மாற்றம் என்பது தற்போது அவசியம் அவசரம் எனவும், மூளை முடுக்கெல்லாம் சட்டமன்ற தொகுதிகளுக்கு சென்று வாக்காளர்களை சந்தித்து ஆட்சி மாற்றத்தை உறுதி செய்வதற்கு அதிமுகவின் கூட்டணி கட்சி தலைவர்கள் கங்கணம் கட்டி கொண்டு பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருவதாகவும்..
திமுக கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் பொதுமக்கள் மீது சுமையை ஏற்றி உள்ளதாகும், திமுக நண்பர்கள் தங்களிடம் தேர்தல் வாக்கு கேட்க வந்தால்..
100-ரூபாய் சிலிண்டர் மானியம் எங்கே. பழைய ஓய்வூதிய திட்டத்தை எப்போது கொண்டுவரப் போகிறீர்கள். முதியோர் உதவித்தொகை என்ன ஆச்சு. கல்வி கடன் ரத்தானதா இல்லையா. மாதம் ஒரு முறை மின் கணக்கீடு ஏன் எடுக்கவில்லை போன்ற கேள்விகளை எழுப்புங்கள்..
தமிழகத்தைப் பொறுத்தவரை சட்டம் ஒழுங்கு சந்தி சிரித்து சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பாதுகாப்பு இல்லாத நிலவி வருகிறது. இதைப் பற்றி கொஞ்சம் கூட கவலைப்படாமல் தமிழகத்தில் டாஸ்மார்க் கடைகளை அதிகரித்துக் கொண்டே போகிறார்கள். டாஸ்மார்க் கடைகளை படிப்படியாக மூட வேண்டும் என்பது தமிழ் மாநில காங்கிரஸின் கோரிக்கையாக இருந்து வருகிறது.. மேலும் லஞ்சம் ஊழல் தமிழகத்தில் தலை விரித்து ஆடுகிறது.
இந்த தேர்தல் பணநாயகத்திற்கும் ஜனநாயகத்திற்கும், நேர்மைக்கும் ஊழலுக்கும், அநீதிக்கும் உண்மைக்கும், தர்மத்திற்கும் அதர்மத்திற்கும் ஆன தேர்தல் ஆகும்..
ஆகையால் தமிழகம் அனைத்து துறைகளிலும் வளர்ச்சி பெற எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக அரசுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்க வேண்டுகிறேன். இவ்வாறு அவர் பேசினார்..