தேர்தல் பறக்கும் படையினரின் சோதனையில் உப்பிலியபுரம் அருகே டூவீலரில் ஆவணமின்றி எடுத்துவரப்பட்ட ரூ1,10,000/- பறிமுதல்

துறையூர் ஏப்-20
திருச்சி மாவட்டம் துறையூர் வட்டம் உப்பிலியபுரம் அருகே உள்ள புடலாத்தி பிரிவு சாலை பகுதியில் 08-04-2026 அன்று தேர்தல் பறக்கும் படை அதிகாரி செல்வகுமார் தலைமையில் உதவி ஆய்வாளர் கீதா, காவலர்கள் கலைச்செல்வன், லோகநாதன் ஆகியோர் அடங்கிய பறக்கும் படையினர் வாகன சோதனை மேற்கொண்டனர்.

அப்போது அவ்வழியாக வந்த வைரிசெட்டிபாளையத்தை சேர்ந்த சுப்பிரமணியன் என்பவரை சோதனை செய்த போது அவரது இருசக்கர வாகனத்தில் உரிய ஆவணம் இன்றி ஒரு லட்சத்து பத்தாயிரம் ரொக்கம் இருந்தது தெரியவந்தது.

இதை அடுத்து ரொக்கத்தை பறிமுதல் செய்த பறக்கும் படையினர் துறையூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் மணிமாறன் முன்னிலையில் தலைமை இடத்து வட்டாட்சியர் முத்துவிடம் ஒப்படைத்தனர்.

வெ.நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *