தமிழக தேர்தல் நேர்மையாக நடக்குமா? மாணவர்கள் கூட்டத்தில் விசிக வன்முறை தாக்குதல். போலீஸ் வேடிக்கை பார்க்கிறதா?
இந்து முன்னணி கண்டனம்- மாநில தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் அவர்களின் பத்திரிகை அறிக்கை.
நேற்று கடலூரில் ஏபிவிபி மாணவர் அமைப்பு நடத்திய தேர்தல் விழிப்புணர்வு பொதுக்கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ரகளை செய்துள்ளனர். காவல்துறையினர் கண் முன்னே மிரட்டல் விடுத்த விடீயோ சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது.
இத்தகைய வன்முறை சம்பவங்கள் திமுகவின் கூட்டணி கட்சிகளால் தொடர்ந்து நடத்தப்படுகிறது. இதற்கு முன்பு தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் இதுபோல் நடந்தன.
மேலும் ஊடகங்கத்தினரும் மிரட்டப்படுகின்றனர். செய்தி சேகரிக்க செல்லும் விடீயோ கலைஞர்கள், நிருபர்களை ஆகியோரை போலீஸ் தாக்குவது, விரட்டுவது தொடர்கிறது. இதற்கு காரணம், தேர்தல் நடத்தும் அதிகாரிகளாக, காவல்துறை அதிகாரிகளாக திமுக ஆதரவாளர்கள் இருப்பதால் தான்.
இன்னமும் திமுகவின் கண் அசைவுக்கே அதிகாரிகள் செயல்படுகின்றனர். எனவே, தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் தமிழகம் இருக்கிறதா? அல்லவா? என்ற சந்தேகம் எழுகிறது.
காவல்துறையின் உயர் அதிகாரிகள் சில இடங்களில் மாற்றப்பட்டனர். ஆனால் பல முக்கிய இடங்களில் அதிகாரிகள் மாற்றப்படவில்லை.
வன்முறையில் இறங்கும் அரசியல் கட்சிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க தவறினால் தேர்தல் நாளன்று வாக்காளர்களை அச்சுறுத்தி, நேர்மையற்ற தேர்தலுக்கு வழி வகுத்து விடும் என்று இந்து முன்னணி சார்பில் எச்சரிக்கிறோம்.
ஆகவே, இவற்றையெல்லாம் தேர்தல் ஆணையம் கவனத்தில் கொண்டு மாணவர்களை தாக்கியவர்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.