திருவாரூர் செய்தியாளர்
வேலா செந்தில்,
நன்னிலம் சட்டமன்ற தொகுதியின் வி.எம்.எஸ். முகமது முபாரக் அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்கு சேகரித்து திமுக மாவட்ட கழக செயலாளர் பூண்டி. கே.கலைவாணன் எம்.எல்.ஏ. அவர்கள் களத்தூர் ,வீராணம் ,வீரமங்கலம், மாளிகை திடல் , மாதகரம் , ஆவூர் ,மணலூர் ஊராட்சிகளில் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து வாக்கு சேகரித்து பிரசாரம் மேற்கொண்டார். ஒன்றிய செயலாளர் வீ. அன்பரசன் மற்றும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் உடன் பங்கேற்றனர்.