மன்னார்குடி., ஏப்ரல். 10
17வது சட்டமன்றத் தேர்தலையொட்டி தமிழகம் முழுவதும் வருகிற 23ம் தேதி சட்டமன்ற தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற உள்ள நிலையில் வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த வகைகள் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் தமிழக வெற்றி கழக வேட்பாளர் யூ .வி. எம். ராஜராஜன் மன்னார்குடி அருகில் உள்ள அண்ணா நகர் , காந்திநகர், மூவாநல்லூர் , எடமேலையூர், உள்ளிட்ட பகுதிகளில் கட்சி நிர்வாகிகளுடன் விசில் சின்னத்திற்கு பொது மக்களிடம் வாக்கு சேகரித்தார்.
அப்போது நான் 20 ஆண்டுகளாக மக்கள் பணியில் ஈடுபட்டு வருகிறேன். கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வருபவன் எனக்கு விசில் சின்னத்தில் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் என்னை வெற்றி பெற வைக்க வேண்டும் என தெரிவித்தார்.