தாம்பரம் செய்தியாளர் பிரகாஷ் 9940337853

அதிமுக தொண்டரின் பெண் குழந்தைக்கு ஜெயலலிதா என பெயர் சூட்டிய அதிமுக வேட்பாளர் சிட்லபாக்கம் ச.இராசேந்திரன்*
தாம்பரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் கழக வேட்பாளராக போட்டியிடும் சிட்லபாக்கம் ச.இராசேந்திரன், தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.
மேற்கு தாம்பரம் பகுதிகளில் வாகன பிரச்சாரத்தை மேற்கொண்ட அவர், கடப்பேரி பண்ணாரி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்து தனது பிரச்சாரத்தை தொடங்கினார். அவருடன் முன்னாள் அமைச்சர் டி.கே.எம். சின்னையா, பாஜக மாவட்ட தலைவர் ரகுராமன், அம்மா ம்மா மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட தலைவர் ம.கரிகாலன் உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
பின்னர், கூட்டணி கட்சித் தொண்டர்கள் புடை சூழ நடைபெற்ற வாகன பிரச்சாரத்தில் மாவட்டக் கழகச் செயலாளர் சிட்லபாக்கம் ச.இராசேந்திரனுக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இந்நிலையில், கடப்பேரி பகுதியைச் சேர்ந்த அதிமுக தொண்டர் பரத்-சந்தியா தம்பதியினருக்கு சமீபத்தில் பிறந்த பெண் குழந்தைக்கு, முன்னாள் முதலமைச்சர் டாக்டர் அம்மாவின் இயற்பெயரான ஜெயலலிதா என்ற பெயரை பெண் குழந்தைக்கு சிட்லபாக்கம் ச.இராசேந்திரன் சூட்டினார். மேலும், குழந்தைக்கு அன்பு முத்தம் கொடுத்து வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
இந்த நிகழ்வு அப்பகுதி மக்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்ததுடன், தேர்தல் பிரச்சாரத்தில் தனித்துவமான தருணமாக அமைந்தது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தாம்பரம் மேற்கு பகுதி கழகச் செயலாளரும் முன்னாள் நகரமன்ற துணை தலைவருமான ஏ.கோபிநாதன் செய்திருந்தார்.
மேலும் இக்கூட்டத்தில் மாவட்டக் கழகப் பொருளாளர் பி.கே.பரசுராமன், தாம்பரம் கிழக்கு பகுதி செயலாளர் எம் கூத்தன் மத்திய பகுதி செயலாளர் எல்.ஆர் ன.செழியன் மாமன்ற உறுப்பினர் ஸ்டார் பிரபா, வட்டக் கழகச் செயலாளர் மாரி உட்பட நிர்வாகிகள், கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.