திண்டுக்கல்லில் உள்ள மதிமுக மாவட்ட கட்சி அலுவலகத்தில் மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மதிமுக மாவட்ட அவைத் தலைவர் சுதர்சன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் மற்றும் உயர்நிலைக்குழு உறுப்பினர் செல்வராகவன், கட்சி வளர்ச்சி நிதி மற்றும் 2026 தேர்தல் நிதி சீட்டு நிர்வாகிகளிடம் வழங்கி சிறப்புரை ஆற்றினார்.

இக்கூட்டத்தில்,மதிமுக பொதுச்செயலாளர் வைகோ,தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமுல்படுத்தக் கோரியும், போதைப் பொருட்களை தடுக்க கோரியும், SIR-யை கண்டித்தும் ஜனவரி 2 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை திருச்சி முதல் மதுரை வரை நடைபயணம் செல்கிறார். இதில் திண்டுக்கல்லில் மூன்று நாட்கள் பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். இதில் கட்சியினர் ஏராளமானோர் பங்கேற்க வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில்,சட்டதிட்ட திருத்தக்குழு உறுப்பினர் பழனிச்சாமி, தீர்மானக்குழு உறுப்பினர் தமிழ்வேந்தன், மாநகர செயலாளர் செல்வேந்திரன், ஒன்றிய செயலாளர் மோகன், மாமன்ற உறுப்பினர் காயத்ரி ஜெயவீரன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *