தாராபுரம் செய்திகளை பிரபு
செல்:9715328420
தாராபுரத்தில் ரூ.8.66 கோடி மதிப்பில் புதிய திட்டப்பணிகள் தொடக்கம்
தாராபுரம் நகராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் ரூ.8.66 கோடி மதிப்பில் புதிய திட்டப்பணிகளை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் மற்றும் அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் தொடங்கி வைத்தனர்.
திட்டங்கள் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி, மாநில சிறப்பு உதவி கட்டடம் மற்றும் நபார்டு திட்டத்தின் கீழ் அமல்படுத்தப்படுகின்றன.
மு.பெ. சாமிநாதன் பேசியதாவது, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தமிழக மக்கள் முன்னேற்றத்திற்காக பல்வேறு நலத்திட்டங்கள் சிறப்பாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாக தெரிவித்தார். தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றும் நோக்கில் மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து பயணம், சுயஉதவிக் குழுக்கள் கடன் தள்ளுபடி, விவசாயிகளுக்கு மின்இணைப்பு, பள்ளி சிறார்களுக்கு கண்ணொளி காப்போம், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், புதுமைப்பெண், மகளிர் உரிமை, தமிழ்புதல்வன், தாயுமானவர், அன்புக்கரங்கள், அன்புச்சோலை போன்ற பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாக கூறினார்.
பின்னர், தாராபுரம் நகராட்சியில் பல்வேறு மேம்பாட்டு பணிகள் தொடங்கப்பட்டன.
அதில் வார்டு எண் 20-ல் ரூ.5 லட்சம் மதிப்பில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி, வார்டு எண் 5-ல் ரூ.6 லட்சம் மதிப்பில் அத்தர் மஜித் தெரு மற்றும் சின்னக்கடை வீதி கான்கிரீட் சாலை மழைநீர் வடிகால் பணி, வார்டு எண் 8-ல் ரூ.350 லட்சம் மதிப்பில் அடித்தளத்துடன் கூடிய சின்டெக்ஸ் தொட்டி அமைக்கும் பணி, வார்டு எண் 19-ல் ரூ.10 லட்சம் மதிப்பில் தேவேந்திரா தெரு மற்றும் கிறித்துவ தெரு மழைநீர் வடிகால் மற்றும் சிறுபாலம் அமைக்கும் பணி இடம்பெற்றது.
மேலும், வார்டு எண் 14, 23, 25, 28 பகுதிகளில் மழைநீர் வடிகால் மற்றும் சிறுபாலம் அமைக்கும் பணிகளும் தொடங்கப்பட்டன.
தாளவாய்பட்டிணம் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக வளாகத்தில் ரூ.2.30 கோடி மதிப்பில் 1500 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட கூடுதல் கிடங்கு அமைக்கும் பணி தொடங்கப்பட்டது.
அதேபோல், தாராபுரம் ஒன்றியத்திற்குட்பட்ட சின்னப்புத்தூர் ஊராட்சியில் ரூ.5.85 கோடி மதிப்பில் சின்னக்கரை ஓடையின் குறுக்கே மேம்பாலம் அமைக்கும் பணி தொடங்கப்பட்டது மொத்தம் ரூ.8.66 கோடி மதிப்பிலான புதிய திட்டப்பணிகளை இரு அமைச்சர்கள் துவக்கி வைத்தனர்.