ஏ பி பிரபாகரன் பெரம்பலூர் செய்தியாளர்.
வேப்பந்தட்டை மேற்கு ஒன்றியத்தில் அதிமுக வேட்பாளர் இளம்பை தமிழ்ச்செல்வன் வாக்கு சேகரிப்பு.
பெரம்பலூர்.ஏப்.12. பெரம்பலூர் அதிமுக வேட்பாளராக முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் மாவட்ட செயலாளருமான இளம்பெண் தமிழ்ச்செல்வன் வேட்பாளராக களத்தில் இருக்கிறார்.
தமிழ்ச்செல்வனுக்காக ஏற்கனவே அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, இந்திய ஜனநாயக கட்சி நிறுவனர் பாரிவேந்தர் ஆகியோர் தேர்தல் பிரச்சாரம் செய்திருந்தனர். இந்நிலையில் தமிழ்செல்வனுடைய மகள் தமிழ் யாழினி தனது அப்பாவிற்கு இரட்டை இலை சின்னத்திற்கு ஓட்டு போடுங்கள் என்று கிராமம் கிராமமாகச் சென்று ஓட்டு சேகரித்து வருகிறார். இந்த சிறுமி தமிழ் யாழினியின் பேச்சை கேட்க ஏராளமான பெண்கள் தன திரண்டு வருகிறார்கள் சிறுவயதில் இவ்வளவு தெளிவாக கட்சியின் கொள்கை கோட்பாடுகளை எடுத்திருப்பதை கவனமாக கேட்கிறார்கள்.
அந்த வகையில் இன்று தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள பாட்டாளி மக்கள் கட்சி, பாரதிய ஜனதா கட்சி, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், இந்திய ஜனநாயக கட்சி, தமிழ் மாநில காங்கிரஸ், புரட்சி பாரதம், புதிய நீதி கட்சி கட்சியை சேர்ந்த தொண்டர்களோடு வேப்பந்தட்டை மேற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட ஈச்சங்காடு, அரசலூர், அன்னமங்கலம், விசுவக்குடி, முகமது பட்டினம், பிள்ளையார் பாளையம், தொண்டமான் துறை, விஜயபுரம், அய்யர் பாளையம், கோரையாறு, பூமிதானம், வெட்டு வாள்மேடு, கவுண்டம்பாளையம், எம்.புதூர், சாஸ்திரிபுரம்,சின்னமுட்லு,மலையாளப் பட்டி,கொண்டாரா குன்று பகுதிகளில் வாக்கு சேகரித்தார். ஒவ்வொரு கிராமத்திற்கும் சென்று வாக்காளரை சந்திக்கும் இளம்பை. தமிழ்ச்செல்வன் ஏற்கனவே தான் சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது ஒவ்வொரு கிராமத்திற்கும் என்னென்ன பணிகள் செய்தேன் என்பதை நினைவு படுத்தியும் மீண்டும் தனக்கு வாய்ப்பு வழங்கினால் உங்களுடைய அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றி தரப்படும் என்று உறுதி அளிக்கிறார். வேட்பாளர் இளம்பை தமிழ்ச் செல்வதற்கு செல்லும் இடமெல்லாம் பெண்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்து வருவதை பார்க்க முடிகிறது.