பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், மேற்கு ஒன்றியம், ஒகலூர் ஊராட்சி கழனி வாசல் கிராமத்தைச் சேர்ந்த அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் கிளை செயலாளர் மு. ரெங்கசாமி, பொருளாளர் த. சண்முகம், மேலவை பிரதிநிதி மு. ராஜக்கண்ணு உள்ளிட்டோர், தங்களது ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைந்தனர்.


இந்நிகழ்ச்சி வேப்பூர் மேற்கு ஒன்றிய செயலாளர் தி. மதியழகன், கிளை கழக செயலாளர் து. முருகேசன், கலை இலக்கிய அணி ஒன்றிய அமைப்பாளர் க. காந்தி, பிரதிநிதி சி. மணிவண்ணன், பொருளாளர் த. சுதாகர், அறங்காவலர் குழு உறுப்பினர் மு. அரிகிருஷ்ணன் ஆகியோரின் முன்னிலையில் நடைபெற்றது.


இணைந்தவர்களை திமுக நிர்வாகிகள் வரவேற்று, கட்சிப் பணிகளில் முழு ஈடுபாட்டுடன் செயல்பட வாழ்த்தினர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *