பாபநாசம் சட்டமன்ற தொகுதியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் ஷாஜஹானை ஆதரித்து ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வை.கோ தீவர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.

அப்போது அவர் பேசியதாவது:-

முல்லை பெரியாறு மேகதாது அணைக்கட்டு மூலம் 48 டி.எம்.சி தண்ணீரை தேக்கினால் கல்லணை மற்றும் கொள்ளிடம் போன்ற எந்த கிளை நதிகளிலும் தண்ணீர் கிடைக்காமல் எத்தியோப்பியாவாக மாறும் இதை எதிர்த்து கடந்த 10 வருடம் போராட்டத்தின் மூலம் பல லட்சம் மக்களை திரட்டி பாதுகாத்து வெற்றி பெற்றுள்ளோம்.

பல்வேறு மாநிலங்களில் ஸ்டெர்லைட் ஆலையை அமைக்க இடம் கொடுக்காத போது தேடி வந்து இடம் அளித்த தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை அமைத்தனர், பின்னர் தொடர் சட்ட போராட்டம் நடத்தி நிரந்தரமாக மூடினோம்.
தொடர் போராட்டம் மூலம் தான் தமிழகம் தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறது.

திராவிட இயக்கத்தை தமிழ்நாட்டில் இருந்து வேரோடு சாய்த்து விடுவோம் என உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆவணத்தோடு தெரிவித்துள்ளார்.
திராவிடத்தை பெரியார்,அண்ணா,மு.க.கருணாநிதி போன்ற வியர்வையால் கண்ணீரால் ரத்தத்தால் வளர்ந்த 75 ஆண்டு கால திராவிட இயக்கம் தான் தற்போது
இந்திய நாட்டின் தலையெழுத்தை தீர்மானிக்கும்.

அமைதி பூங்காவாக இருக்கும் தமிழகத்தை சீர்குலைக்க திட்டமிட்டு வருகின்றனர்.தமிழகத்தில் அமைதி நிலவ வேண்டும்,சகோதரத்துவம் தலைக்க வேண்டும்,வட இந்தியாவில் இருந்து ஏகாபத்திய சிந்தனையோடு களம் கான வருகை தரும் அனைவரையும் திராவிட இயக்கம் தடுத்து நிறுத்தும்.

திமுக தலைமையிலான ஆட்சியில் மகளிர் உரிமை திட்டம்,கட்டணமில்லா விடியல் பயணத் திட்டம்,கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி திட்டம்,நான் முதல்வன், மற்றும் தமிழ் புதல்வன் திட்டம், வேளாண் திட்டங்கள் மூலம் 20 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் என பல்வேறு திட்டங்களை சிறப்பாக நடைபெற்றுள்ளது.

தமிழக மக்கள் முடிவு எடுத்து விட்டார்கள் வருகிற சட்டமன்றத் தேர்தலில் திராவிட மாடல் நல்லாட்சி தமிழகத்தில் 200 இடங்களில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றி பெறும் அதில் தி.மு.க தனிப் பெரும்பான்மை பெற்று கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை என மக்கள் தீர்ப்பு அளிப்பார்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

அப்போது பாபநாசம் சட்டமன்ற தொகுதிபொறுப்பாளர் ரெங்கசாமி, மதிமுக மாவட்ட செயலாளர் சரவணன், அமைப்பாளர் பாலசுப்பிரமணியன்,திமுக ஒன்றிய செயலாளர்கள் தாமரைச்செல்வன், நாசர்,தியாகசுரேஷ்,குமார்,முத்துச்செல்வன்,மற்றும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியைச் சேர்ந்த மாவட்ட,ஒன்றிய,பேரூர்,கிளை கழக மற்றும் முன்னாள் உள்ளாட்சி நிர்வாகிகள் சார்பு அணி நிர்வாகிகள் திரளான பலர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *