திருச்சி மாவட்டத்தில் உள்ள ஒன்பது சட்டமன்ற தொகுதிகளிலும் தேர்தல் பறக்கும் படையினர் கடந்த மாதம் 15 ஆம் தேதியிலிருந்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர். நேற்று ஏப்ரல் 11 ஆம் தேதி வரை ஒரு கோடியே 36 லட்சம் ரூபாய் ஆவணமின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இதில் உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டதின் அடிப்படையில் ஒரு கோடியே 28 லட்சம் ரூபாய் ரொக்கம் திருப்பி ஒப்படைக்கப்பட்டுள்ளதாக திருச்சி மாவட்ட ஆட்சியரும் தேர்தல் நடத்தும் அதிகாரியுமான சரவணன் தெரிவித்துள்ளார்.

மண்னை
க.மாரிமுத்து.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *