செங்குன்றம் செய்தியாளர்

மாதவரம் மண்டலம் 3 உதவி ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில், மண்டல பொறியாளர் அனந்தராவ் மற்றும் உதவி செயற்பொறியாளர்கள், நிர்வாக அலுவலர் குணசேகர் மற்றும் அலுவலக ஊழியர்கள் அனைவரும் அம்பேத்கர் பிறந்த நாளில் உறுதிமொழி ஏற்றனர்.

இதில் சாதி வேறுபாடுகளுக்கு எதிராகவும் , சாதிகளின் பெயரால் நடக்கும் சமூக அடக்க முறைகளுக்கு எதிராகவும், தொடர்ந்து போராடி ஒதுக்கப்பட்டவர்களுடைய உரிமைக்களுக்காகவும், சமத்துவத்திற்காகவும் வாழ்நாள் முழுவதும் குரல் கொடுத்துஏழை , எளிய மக்களின் உரிமைகளை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்திய அரசியல் அமைப்பு சட்டத்தை வழிவகுத்து தந்த அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாளில் சாதி வேறுபாடுகள் எதுவும் இல்லாத சமத்துவ சமுதாயத்தை அமைக்க நாம் அனைவரும் பாடுபடுவோம் , என்றும் சக மனிதர்களை சாதியில் பெயரால் ஒருபோதும் அடையாளம் காண மாட்டேன் என்றும் சமத்துவத்தை வாழ்நாள் முழுவதும் கடைபிடிப்பேன் என்றும் உறுதிமொழி ஏற்றனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *