ஈரோடு கிழக்கு தொகுதியின் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர் கோபிநாத் பழனியப்பன் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் வாக்குறுதிகள் வெளியீடு

ஈரோடு கிழக்கு தொகுதியின் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் கோபிநாத் பழனியப்பன் காங்கிரஸ் கட்சியின் வாக்குறுதி நகலை வெளியிட்டனர் அவருடன் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆர் எம் பழனிச்சாமி ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராஜேஷ் ராஜப்பா ஊடகப்பிரிவு தலைவர் அர்ஷத் சிறுபான்மை பிரிவு துணை தலைவர் பாட்ஷா, சத்திய மூர்த்தி, குப்பண்ணா சந்துரு உட்பட பலர் கலந்து கொண்டனர்

மேலும் வேட்பாளர் கோபிநாத் பழனியப்பன் அவர்கள் கூறுகையில் நாங்கள் எங்களுடைய திட்டங்களை நாங்கள் அறிவித்துள்ளோம் ஆனால் எங்களுடைய மதசார் பற்ற முற்போக்கு கூட்டணியின் தலைவர் தமிழக முதல்வர் திரு ஸ்டாலின் அவர்கள் மக்களுக்கு நடைமுறையில் செய்து வரும் இலவச மகளிர் பேருந்து திட்டம் மகளிர்களுக்கு உரிமைத் தொகை திட்டம், பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவு திட்டம் இது போன்ற நல்ல பல திட்டங்களை மக்களிடம் எடுத்து சொல்லி நாங்கள் வாக்கு சேகரிப்பில் ஈடுபடுவோம் எங்களுக்கு வெற்றி வாய்ப்பு மக்களிடையே பிரகாசமாக உள்ளது

செல்லும் இடமெ ல்லாம் மிகுந்த வரவேற்பும் உள்ளது என தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில் நான் இந்த ஈரோடு கிழக்கு தொகுதியில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராகும் பட்சத்தில் நான் இந்த ஈரோடு மக்களுக்கு ஈரோட்டில் சுற்றுலா தளங்கள் ஏற்படுத்த பாடுபடுவேன் மாண்புமிகு அமைச்சர் முத்துசாமி அவர்களின் பரிந்துரையின் அடிப்படையில் இன்னும் பல திட்டங்களை செயல் படுத்துவேன் எனவும் கூறினார்

மேலும் முன்னாள் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவேரா அவர்கள் ஈரோடு மக்களுக்காக 50 ஆண்டுகாலம் வீடுகளுக்கு பட்டா இல்லாமல் இருந்ததை முதல்வரிடம் கேட்டு பெற்றுக் கொடுத்திருந்தார் அது போல் அவர் விட்டுச்சென்ற அனைத்து பணிகளையும் நான் தொடர்வேன் எனவும் இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன் எனவும் கூறினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *