ஆயக்குடியில் விசிக சார்பில் அம்பேத்கரின் 135 வது பிறந்தநாள் விழா நிகழ்ச்சி..

திண்டுக்கல் மாவட்டம் பழனி அடுத்த ஆயக்குடி பேருந்து நிறுத்தம் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட துணை செயலாளர் வாஞ்சிநாதன்
மற்றும் 16வது வார்டு விசிக கவுன்சிலர் சரஸ்வதி வாஞ்சிநாதன் ஆகியோர் தலைமையில் அம்பேத்கரின் 135 வது பிறந்தநாள் விழா நிகழ்ச்சி நடைபெற்றன.

தொடர்ந்து பேருந்து நிலையத்தில் அம்பேத்கரின் திருவுருவப்படம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டன.

திண்டுக்கல் பாராளுமன்ற உறுப்பினர் சச்சிதானந்தம் விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் போர்க்கொடியேந்தி மாவட்ட பொருளாளர்
துரை.முத்தரசு மாவட்ட செய்தி தொடர்பாளர் பிரபு பகுஜன் சமாஜ் கட்சியின் மாவட்ட தலைவர் நாச்சிமுத்து ஆகியோர் முன்னிலையில் அம்பேத்கர் திருவுருவபடத்திற்கு மலர் தூவி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவச புத்தக நோட்டு உபகரணங்கள் வழங்கும் விழா நிகழ்ச்சி நடைபெற்றன.

மேலும் இந்நிகழ்வில் மாவட்ட துணை செயலாளர் அப்துல் கலாம் ஆசாத்,
விடுதலை காமராசு இளஞ்சிறுத்தை மாவட்ட செயலாளர் ஜெய் ஸ்ரீ, ஜெய்சீலன்,
மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் மருதமுத்து, வடிவேல், செந்தமிழன், மாநில துணை செயலாளர் பொதினிவளவன் வாய்க்கால் சாமி காளிமுத்து மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கமலக்கண்ணன் சிடிசி திருமாமணி, முத்தரசு,நகர செயலாளர் மணவாளன் நகர பொருளாளர் தமிழண்ணன் நகர துணை செயலாளர் மணிகண்டன் பொன்.அன்பழகன், மில்லர் மண்டேலா, முரளி, சுரேஷ்குமார்,பாண்டிவளவன்,
கோதை திருமாறன், நெய்க்காரப்பட்டி மூர்த்தி,சேரிதமிழன், முகிலன், சரவணன், செந்தமிழன், கார்த்தி,வள்ளி தயாளன், கலைச்செல்வன், கிரிராஜா, பாலன், மின்னடி,
தங்க நிலவன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு புரட்சியாளர் அம்பேத்கரின் பிறந்தநாள் விழா நிகழ்ச்சி நடைபெற்றன..

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *