எபி பிரபாகரன் பெரம்பலூர் செய்தியாளர்.
வேப்பந்தட்டை மேற்கு ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளர் தமிழ்ச்செல்வன்.
பெரம்பலூர்.ஏப்.14. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் எட்டு நாட்களே இருக்கின்ற நிலையில் அரசியல் கட்சியினர் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
அந்த வகையில் பெரம்பலூர் சட்டமன்ற அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டு இருக்கும் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான இளம்பை. இரா. தமிழ்ச்செல்வன் கூட்டணி கட்சியினரேடு சேர்ந்து கிராமம் கிராமமாக பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரித்து வருகிறார்
அந்த வகையில் இன்று வேப்பந்தட்டை மேற்கு ஒன்றியத்திற்கு வெண்பாவூர், பெரிய வடகரை, பாண்டக பாடி, மாவிலங்கை, நெற்குணம், நெற்குணம் காலனி, நூத்தப்பூர், பாளையம், உடும்பியம், கள்ளப்பட்டி, மேற்குப் பெரியம்மாபளையம், அம்பேத்கர் நகர், கிழக்கு பெரியமா பாளையம், இந்திரா நகர், வெங்கனூர் ஆகிய பகுதிகளில் வாக்காளர்களும் வாக்கு சேகரித்தார் வேட்பாளர் இளம்பை தமிழ்ச்செல்வன்.
அதேபோல் அரும்பாவூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பாரதிபுரம் காலனி, தண்ணீர் கோணி, PL மாரியம்மன் கோவில், பாலக்கரை, கல் ஓட்டத்தெரு, பள்ளிவாசல், சனிமூலை தெரு, ஆஸ்பத்திரி ரோடு, கனரங்காடு காலனி, ஆ.மேட்டூர் பாலம், மலையாள பட்டி ரோடு, முருகன் கோவில், பெரியசாமி கோவில் பாதை, உட்பட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்தார்.
மேலும் இளம்பை தமிழ்ச்செல்வன் சொல்லும் இடமெல்லாம் பொதுமக்களும் பெண்களும் உற்சாக வரவேற்பு கொடுத்து வருகிறார்கள். அனைவர்களும் எப்போதும் இயல்பாக பேசக்கூடிய இழப்பை தமிழ்ச்செல்வன் ஓட்டு சேகரிப்பிலும் அதே பாணியில் ஓட்டு சேகரிக்கிறார்.
வேப்பந்தட்டை வட்டத்திற்கு உட்பட்ட விசுவக்குடி நீர்த்தேக்கத்தை கட்டி முடிக்க அதிகாரத்திலிருந்து யாருமே அதற்கான முயற்சி எடுக்காமல் இருந்தபோது தான் சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது கடும் முயற்சியினால் விசுவக்குடி அணை கட்டி முடிக்கப்பட்டது என்பதை இன்றும் பெருமையோடு வாக்காளர்களிடம் கூறி ஓட்டு கேட்கிறார். வேட்பாளர் தமிழ்ச்செல்வனோடு ஒன்றிய செயலாளர் சிவப்பிரகாசம் பாட்டாளி மக்கள் கட்சி, பாரதிய ஜனதா கட்சி, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், புரட்சி பாரதம், தமிழ் மாநில காங்கிரஸ், இந்திய ஜனநாயக கட்சி, தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், நாயுடு பேரவை, புதிய நீதி கட்சியை சேர்ந்தவர்களும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்..