தேசிய மனித உரிமைகள் பாதுகாப்பு அமைப்பின் மனித உரிமைகள் பற்றிய விழிப்புணர்வு கூட்டம் தேசிய தலைவர் டாக்டர் சின்னராஜ் ராமசாமி பங்கேற்பு.
தேசிய மக்கள் உரிமைகள் பாதுகாப்பு அமைப்பின் மனித உரிமைகள் பற்றிய விழிப்புணர்வு பொதுக்கூட்டம் மற்றும் புதிய பொறுப்பாளர்கள் உறுப்பினர்கள் அறிமுக நிகழ்ச்சி ஏப்ரல் 12 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் தாலுகாவிற்கு உட்பட்ட குரும்பபாளையம் பகுதியில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினராக தேசிய மனித உரிமைகள் பாதுகாப்பு அமைப்பின் தேசிய தலைவர் டாக்டர் சின்னராஜ் ராமசாமி வருகை புரிந்து தேசிய மனித உரிமைகள் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வுகளை அங்கு வந்த அனைத்து பொது மக்களுக்கும் உறுப்பினர்களுக்கும் எடுத்துரைத்தார்
மேலும் விழாவை தேசிய செயலாளர் வி செந்தில் குமார் தலைமை ஏற்று நடத்தினார் மேலும் மாநில தலைவர் அந்தோணி ராஜ் அனைவரையும் வரவேற்று பேசினார்
மாநில மகளிர் அணி தலைவி லோகநாயகி அவர்கள் மற்றும் மாநில மகளிர் அணி செயலாளர் மகேஸ்வரி உட்பட மனித உரிமை காப்பாளர்கள் பொறுப்பாளர்கள் உறுப்பினர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.