ஈரோடு ஏப்ரல் – 16

இன்று ஈரோடு சம்பத் நகர் ஏரியாவில் காங்கிரஸ் கட்சியின் கர்நாடக மாநில துணை முதலமைச்சர் டி கே எஸ் சிவக்குமார் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார் அவர் காங்கிரஸ் கட்சி ஒரு அமைதியான கட்சி மக்களுக்கு நிம்மதியை தரும் ஒரு கட்சி தற்போது ஆட்சி செய்யும் பாஜக அரசு மக்களை பல வகைகளில் துன்புறுத்தி ஆட்சி செய்து வருகின்றது இந்த நிலை மாற மக்கள் நீங்கள் காங்கிரஸ் கூட்டணி கட்சிக்கு ஆதரவு கொடுங்கள் திரு கோபிநாத் பழனியப்பன் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி வேட்பாளர் அவர்களுக்கு கை சின்னத்தில் வாக்களித்து அவரை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்யுங்கள் எனக் கூறினார்.


மேலும் அவர் கூறியபோது நான் சற்று காலதாமதமாக வருவதற்கு காரணம் முன்னாள் அமைச்சர் திரு செந்தில் பாலாஜி மற்றும் திமுக சபரீசன் சார் ஆகியோரை சந்தித்து சற்று பேசி விட்டு வந்த காரணத்தினால் தாமதம் ஆகிவிட்டது எனக்கு கூறினார். மேலும் அவர் கூறுகையில் தற்போது ஐந்து ஆண்டுகளாக தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் சிறப்பான ஆட்சியை உங்களுக்கு கொடுத்துள்ளார்

மக்கள் அவரின் கடந்த கால ஐந்து ஆண்டு ஆட்சி யை தாங்கள் அறிந்ததே அவர் ஆட்சி கலைஞர் அவர்கள் விட்டுச் சென்ற ஆட்சி தற்போது சிறப்பாக மு க ஸ்டாலின் அவர்கள் செய்து வருகிறார் மக்களுக்கு நல்ல பல திட்டங்களை கொடுத்து வருகிறார் மேலும் உங்களின் துணை முதல்வராக இருக்கும் உதயநிதி ஸ்டாலின் சிறப்பானவர் இளைஞர் துடிப்பு மிக்கவர் சிறப்பாக செயல்பட்டு வருகிறார் எனவும் அவர் கூறினார்.

மேலும் இந்த கிழக்கு சட்டமன்ற தொகுதி ஈரோடு பெரியார் அவர்களின் மண்
ஈ வி கே ஸ் இளங்கோவன் அவர்களால் வளர்க்க பட்ட இந்த காங்கிரஸ் கட்சியை திரு கோபிநாத் பழனியப்பன் அவர்கள் இ வி கே எஸ் இளங்கோவன் அவர்கள் விட்டுச் சென்ற அனைத்து பணிகளையும் சிறப்பாக செய்து முடிப்பார் என நான் உறுதிபட தெரிவிக்கின்றேன்.

எனவே தாங்கள் மக்கள் அனைவரும் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு போட்டியிடும் அருமை தம்பி வேட்பாளர் திரு கோபிநாத் பழனியப்பன் அவர்களுக்கு கை சின்னத்தில் வாக்களித்து சிறப்பான ஒரு மகத்தான வெற்றி பெற செய்யுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன். நன்றி வணக்கம் என தெரிவித்தார்.

இந்த தேர்தல் பிரச்சார களத்தில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தலைவர்கள் உறுப்பினர்கள் தொண்டர்கள், மகளிர் அணியினர் கலந்து கொண்டனர் திமுக சார்பில் தெற்கு மாவட்ட துணைச் செயலாளர் செந்தில்குமார், பி கே பழனிச்சாமி, காங்கிரஸ் சார்பில் ஈரோடு மாவட்ட தலைவர் ராஜேஷ் ராஜப்பா, காங்கிரஸ், முன்னாள் ஈரோடு மாவட்ட காங்கிரஸ் தலைவர் இ பி ரவி, ஊடகப்பிரிவு தலைவர் முகமது அர்ஷத், காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு துணைத் தலைவர் பாட்ஷா, ஈரோடு மாமன்ற உறுப்பினர் உறுப்பினர் விஜயபாஸ்கர், காங்கிரஸ் நிர்வாகி சத்தியமூர்த்தி, பேபி,உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் மதிமுக, எஸ் டி பி ஐ, தேமுதிக, வி சி க உள்ளிட்ட அனைத்து கூட்டணி கட்சிகளும் தேர்தல் பிரச்சாரத்தில் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *