எஸ் செல்வகுமார் சீர்காழி
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் கல்வித் துறையில் நீண்டகாலம் பணியாற்றி ஓய்வுபெற்ற உடற்கல்வி இயக்குநர் மற்றும் ஆசிரியர்களுக்கு சக உடற்கல்வித் துறை ஆசிரியர்கள் இணைந்து எழுச்சிமிகு பாராட்டு விழாவை நடத்தினர். சீர்காழி சபாநாயக முதலியார் இந்து மேல்நிலைப் பள்ளியில் 35 ஆண்டுகள் பணியாற்றி தலைமையாசிரியராகவும் உடற்கல்வி இயக்குநராகவும் 35 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்ற எஸ். முரளிதரன் மற்றும் திருவெண்காடு எஸ்.எஸ்.டி மேல்நிலைப் பள்ளியில் 33 ஆண்டுகள் உடற்கல்வி ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற எஸ். செல்லதுரை ஆகியோர் இந்த கல்வி ஆண்டுடன் பணி நிறைவு பெறுகின்றனர்.
இவர்களைக் கௌரவிக்கும் விதமாக சீர்காழி புறவழிச்சாலையில் உள்ள ஏஞ்சல் பேலஸில் பாராட்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்விற்கு பெஸ்ட் கல்வி குழுமத்தின் நிர்வாக இயக்குனர் எஸ்.எஸ்.என் ராஜ்கமல் மற்றும் குட் சமாரிடன் பள்ளியின் இயக்குனர் ஆர். பிரவீன் வசந்த் செபஸ் ஆகியோர் தலைமை வகித்தனர்.
திருமுல்லைவாசல் விக்டோரியா பள்ளியின் தாளாளர் ராஜேஷ், ராஜு மற்றும் ராஜீவ் காந்தி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு தங்க மோதிரம் ஓய்வு பெறும் இருவருக்கும் அணிவித்து சிறப்புரையாற்றினார்கள்.
நாகப்பட்டினம் மாவட்ட கால்பந்து சங்கத் தலைவர் ஏ.கண்ணன், மயிலாடுதுறை தேசிய மேல்நிலைப் பள்ளி ஓய்வு பெற்ற உடற்கல்வி இயக்குனர் எஸ்.ரவிச்சந்திரன், குத்தாலம் உடற்கல்வி ஆசிரியர் சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் பணி நிறைவு பெற்ற எஸ். முரளிதரன் மற்றும் எஸ்.செல்லதுரை ஆகிய இருவருக்கும் சக உடற்கல்வி ஆசிரியர்கள் சார்பில் சால்வை, நினைவு கேடயம் மற்றும் சந்தன மாலைகளுடன் நெகிழ்ச்சியான முறையில் பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டது. இவர்கள் இருவரும் தங்கள் பணிக்காலத்தில் மாணவர்களை மாநில மற்றும் தேசிய அளவிலான தடகளப் போட்டிகளில் பங்கேற்கச் செய்து பல்வேறு பதக்கங்களை வென்று சாதனை புரிய உறுதுணையாக இருந்தவர்கள்.
மேலும் இம்மாணவர்கள் விளையாட்டுத் துறையின் மூலம் பல்வேறு அரசுத் துறைகளில் பணியாற்றிட வழிவகை செய்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக ஆயங்குடி பள்ளம் வெங்கடேஸ்வரா மேல்நிலைப் பள்ளி உடற்கல்வி ஆசிரியர் கேசவன் வரவேற்புரை கூற . வடகால் ரஹ்மானியா பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் ரகுமான் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை உடற்கல்வி ஆசிரியர்கள் டி.முரளி, ஜான் ஹென்றி, சிதம்பரம், கலைவேந்தன், ரமேஷ் ஆகியோர் செய்திருந்தனர்.
விழாவில் பெஸ்ட் மெட்ரிக் பள்ளி முதல்வர் ராமலிங்கம், ஆரோக்கிய அன்னை பாராமெடிக்கல் கல்லூரி தாளாளர் டாக்டர் ஞானசேகரன், திருவெண்காடு சந்திரசேகரன், சுஜாதா, சுதா பிரீத்தா, தலைமை ஆசிரியை எஸ். சுசீலா, பாண்டிச்சேரி கண்ணன், சுரேஷ்குமார், சிங்கப்பூர் வினோத், கோனையாம்பட்டினம் கோபி, விஸ்வநாதன், மயிலாடுதுறை அண்ணாதுரை, செழியன், பன்னீர், மேலையூர் முத்துக்குமார், சமுஇ மேல்நிலைப் பள்ளி முதுகலை ஆசிரியர்கள் முருக பாண்டியன், ரவிச்சந்திரன், பெஸ்ட் பள்ளி முதல்வர் ராமலிங்கம் மற்றும் நகரமன்ற கவுன்சிலர்கள் பாஸ்கர், குமார், குகன், கணேசன் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.
மேலும் மயிலாடுதுறை மாவட்ட பொறுப்பாளர்கள் விநாயகம், துரைமுருகன் மற்றும் 200-க்கும் மேற்பட்ட உடற்கல்வி துறையினை சார்ந்த ஆசிரியர்கள், ஆசிரியைகள், ஊர் முக்கியஸ்தர்கள் மற்றும் உறவினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நிறைவாக கபடி நடுவர் ஜான் ஹென்றி நன்றி கூறினார்.