நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் சட்டமன்ற தொகுதியில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் வேட்பாளர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் என்பவர் போட்டியிடுகிறார். அவர் தொகுதி முழுவதும் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
அதன் ஒரு பகுதியாக இராசிபுரம் அருகே உள்ள, மூலப்பள்ளிபட்டி, ஈஸ்வரமூர்த்தி பாளையம் நாமகிரிப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது பொதுமக்களிடம் பேசிய அக்காட்சியின் வேட்பாளர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் கூறும் போது,
தமிழகத்தில் திமுக அதிமுக கட்சிகள் மாறி மாறி ஆட்சி செய்த காரணத்தால் தமிழகத்தில் பெரிய அளவிலான வளர்ச்சியோ மாற்றமோ ஏற்படவில்லை. அனைத்து அனைத்து தரப்பு மக்களும் இந்த கட்சிகளின் ஆட்சியால் முன்னேறவில்லை. இரு கட்சிகளும் ஊழல் செய்து மக்கள் பணத்தை கொள்ளையடிப்பதற்காக ஆட்சிக்கு வர துடிக்கிறார்கள். ஆனால் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய், பொது மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பதற்காகவே அரசியலுக்கு வந்துள்ளார். சிறியவர் முதல் பெரியவர் வரை அனைத்து தரப்பு மக்களின் வளர்ச்சிக்காகவும் பெண்களின் பாதுகாப்புக்காகவும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்த உள்ளார்.
எனவே தமிழகத்தில் பொதுமக்கள் வாக்காளப் பெருமக்கள் ஒரு மாற்றத்தை அளிப்பதற்காக ஒருமுறை தமிழக வெற்றிக்கழகத்திற்கு வாய்ப்பு அளிக்க வேண்டும். அப்போதுதான் தமிழகத்தின் வளர்ச்சியை நீங்கள் பார்க்க முடியும்.
நீங்கள் வாக்களித்து வெற்றி பெறச் செய்தால், பெண்களுக்கு பாதுகாப்பான ஆட்சியாக விஜய் நடத்துவார். கல்வி சுகாதாரம் வேலைவாய்ப்பு குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அனைத்தும் முக்கியத்துவம் அளிக்கப்படும். கிராம பகுதிகளில் விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்க விளையாட்டு மைதானம் அமைத்து தரப்படும். எனவே திராவிடக் கட்சிகளுக்கு இதுவரை வாக்களித்தது போதும். தமிழகத்திற்கு ஒரு மாற்றத்தை தர நல்ல ஆட்சியை தர வாக்காள பெருமக்கள் அனைவரும் தமிழக வெற்றிக்கழகத்தை ஆதரிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
முன்னதாக, மூலப்பள்ளிப்பட்டி கிராமத்திற்கு வருகை தந்த இராசிபுரம் தமிழக வெற்றிக்காக வேட்பாளர் லோகேஷ் தமிழ்ச்செல்வனுக்கு கிராம பொதுமக்கள், கட்சி நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.