மறுசீரமைப்பு சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து. கோவையில் பல்சமய நல்லுறவு இயக்கம்,தி.மு.க.சாய்பாபா காலனி பகுதி கழகம் சார்பாக கருப்பு கொடி ஆர்ப்பாட்டம்

டெல்லியில் மக்களவை தொகுதிகளை 850 ஆக உயர்த்தும் தொகுதி மறுசீரமைப்பு சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழ்நாட்டில் திமுக சார்பில் வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி போராட்டம் நடத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார் இந்நிலையில்,கோவை சாய்பாபாகாலனி பகுதியில் பல்சமய நல்லுறவு இயக்கம் மற்றும் சாய்பாபாகாலனி பகுதி கழகம் சார்பாக கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது..

பல்சமய நல்லுறவு இயக்க தலைவர் முகம்மது ரபி மற்றும் சாய்பாபாகாலனி பகுதி கழக செயலாளர் ரவி ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இதில், பாராளுமன்றத்தில் கொண்டு வரப்படும், தொகுதி மறுவரை (Delimitation) மசோதா தென்மாநிலங்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தை பாதிக்கும் எனக் குற்றம்சாட்டினர்..

ஆர்ப்பாட்டத்தில், தென்மாநிலங்களின் உரிமைகளை பறிக்க வேண்டாம்”, “நியாயமான பிரதிநிதித்துவம் வேண்டும்”, “மக்கள் தொகையை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு தொகுதி மறுவரை செய்யக்கூடாது” போன்ற கோஷங்கள் எழுப்பப்பட்டு,மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி கோசங்கள் எழுப்பினர்…

இதில், பல்சமய நல்லுறவு இயக்க நிர்வாகிகள் அபுதாகீர்,பூமார்கெட் ஹைதர் அலி திப்பு சுல்தான் பள்ளி தக்னி சுன்னத் ஜமாத் பொருளாளர் வழக்கறிஞர் இஸ்மாயில்,தி.மு.க.,மாணவரணி பகுதி அமைப்பாளர் கோவை தல்ஹா,மற்றும் அசார்,தி.மு.க.,வார்டு செயலாளர்கள் கண்ணன்,முரளி,வினோத்,சுகுமார்,சிராஜுதீன்,சேகர்,பாஷா ,ராதா கிருஷ்ணன்,லிங்கேஷ்வரன்,ஹரிஸ்,பாதல்,பத்மதாநன்,கலாவதி மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்…

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *