தூத்துக்குடி மாவட்டம்

இந்திய நாடாளுமன்றத்தில் தொகுதி மறு வரையறை மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதில் யார் அரசியல் செய்கிறார்கள் என மக்களுக்கு தெரியும் என புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் தொகுதியில் அவரது கட்சி சார்பில் போட்டியிடும் அவர் இன்று மாலை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அப்போது அவர் கூறுகையில்…

தொகுதி மறு வரையறை, நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை உயர்த்துவது,
மகளிர் இட ஒதுக்கீடு ஆகிய மூன்று முக்கிய மசோதாக்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.

மகளிர் இட ஒதுக்கீடு அவசியமானதாகவும் மகளிர் உரிய முக்கியத்துவம் கொண்டு வருவதை வரவேற்கிறோம் இந்திய மக்கள் தேவை சட்ட நடைமுறைகளை உருவாக்குவதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கை 850 ஆக உயர்த்துவது ஒரே மசோதாவாக மாற்றுவது அவசியமானதாகும்.

ஆனால் தொகுதி மறுவரை செய்யும் போது மாநிலங்களின் உரிமை பாதிக்காத வகையில் சரியாக இருக்கவேண்டும் ஒரு மாநிலங்களின் முக்கியத்துவம்
மதிப்பு குறைந்துவிடும் ஒட்டு மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கை உயர்த்தும் போது பிற மாநிலங்களில் உறுப்பினர்களின் எண்ணிக்கை உயர்த்துவது போன்று தமிழ்நாட்டுக்கும் உறுப்பினர்களின் எண்ணிக்கை உயர்த்த வேண்டும் மாநிலங்களின் முக்கியத்துவம் சதவீத அடிப்படையில் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும்.

தமிழ்நாட்டு மக்களின் மதிப்பு குறைத்தால் தமிழ்நாட்டிற்கு வகையில் பாதிப்பாக இருக்கும். எந்தவிதத்திலும் தமிழ் முக்கியத்துவம் குறைய கூடாது என்ற அவர் தொகுதி மறு வரையறை மசோதா விஷயத்தில் யார் அரசியல் செய்கிறார்கள் என்பது தமிழக மக்களுக்கு தெரியும் என்று கூறினார் புதிய தமிழகம் கட்சி வேட்பாளர்கள்
61 தொகுதிகளில் போட்டியிடுகின்றனர்.

ஓட்டப்பிடாரத்தில் நான் சட்டமன்ற உறுப்பினர் ஆக இருந்த போது செய்த பணிகள் குடிநீர், புதிய பேருந்து நிலையம்,பள்ளிக்கூட மேம்பாடு என 90 சதவீதம் கிராமங்களுக்கு வளர்ச்சி பணிகள் செய்தேன் இடைப்பட்ட காலத்தில் தொகுதி தேய்ந்து போயுள்ளது நான் வெற்றி பெற்று தொகுதியை மீண்டும் வளர்ச்சி பாதையில் கொண்டு செல்வேன் என்று கூறிய அவர்

ஆளும் கட்சியும் எதிர் கட்சியும் பணத்தை நம்பி தேர்தலை எதிர்கொள்கின்றன.

அடுத்து வரும் 7நாட்கள் தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிர படுத்த வேண்டும் மது இல்லாத தமிழகம், லஞ்சம் இல்லா தமிழகம் உருவாக வேண்டும் என்பதே எங்கள் நோக்கம் அது குறித்து பிரச்சாரம் செய்து மக்களிடம் வாக்கு சேகரித்து வருகிறோம் என்று கூறினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *