ஏ.பி. பிரபாகரன், பெரம்பலூர் செய்தியாளர்.

பெரம்பலூர். ஏப்.16. பெரம்பலூர் மாவட்டத்திற்கு உட்பட்ட குன்னம் சட்டமன்ற தொகுதியில் தமிழக வெற்றி கழகத்தின் வேட்பாளராக களம் இறக்கப்பட்டு இருப்பவர் ஆய்க்குடி கிராமத்தைச் சேர்ந்த கட்சியின் அடிப்படை உறுப்பினரான ரேவதி என்பவர். இவருக்கு தொகுதியில் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது என்பதை கள ஆய்வு செய்தபோது கிடைத்த தகவல்களை சுருக்கமாக பார்ப்போம்.

திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் எஸ் எஸ் சிவசங்கரன் போட்டியிடும் தொகுதி என்பதால் வி ஐ பி அந்தஸ்து பெற்று இருக்கிறது. தொகுதியில் திமுக சார்பில் சிவசங்கரன் போட்டியிடுகிறார். அதிமுக கூட்டணி சார்பாக போட்டியிடும் சரண்யாவுக்கும் தான் நேரடி போட்டி என்று சொல்லப்பட்டாலும் இருவருக்கும் சவாலாக இருக்கக்கூடியவர் தான் தமிழக வெற்றிக் கழகத்தினுடைய வேட்பாளர் ரேவதி என்பதை மறுக்க முடியாது.

தமிழக வெற்றி கழகத்தை ஆரம்பித்தபோது கட்சியின் தலைவரான விஜய் எங்களோடு வருவோருக்கு கூட்டணியில் பங்கு தருகிறோம், ஆட்சி அதிகாரத்திலும் பங்கு தருகிறோம் என்று கூறினார். ஆனால் இவரோடு கூட்டணி சேர்வதற்கு யாரும் முன் வரவில்லை என்று சொல்வதை விட கூட்டணிக்கு வருபவர்களை பல வழிகளிலும் தடுத்த பெருமை திமுகவுக்கு தான் உண்டு. வேறு வழி இல்லாமல் 234 தொகுதியிலும் தமிழக வெற்றி கழகம் விசில் சின்னத்தில் தனித்து களம் காண்கிறது.

குன்னம் தொகுதியில் ரேவதியை ஆதரித்து கட்சியின் முக்கிய புள்ளிகள் யாரும் ஓட்டு கேட்க வரவில்லை என்றாலும், தன்னால் எதுவும் முடியும் என்கின்ற தைரியத்தோடு கட்சி தொண்டர்களை கூட்டிக்கொண்டு கிராமம் கிராமமாக சென்று ஓட்டு கேட்டு வருகிறார் ரேவதி. சில நேரங்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை பற்றி கூட தனிப்பட்ட விமர்சனம் செய்ததாக பொதுவெளியில் பேசப்பட்டது. தவெக வேட்பாளர் ரேவதி எங்கும் பிரச்சாரம் செய்யக்கூடாது என்று ஆளுங்கட்சியான திமுகவினர் குரல் எழுப்பினர். இன்று ரேவதி குன்னம் தொகுதியில் ஒரு சில இடங்களில் பிரச்சாரத்தை தொடங்கினார்.

அப்போது வேட்பாளர் ரேவதி திமுகவினரை பார்த்து முறைப்படி அனுமதி வாங்கிக்கொண்டு தான் தேர்தல் பிரச்சாரம் செய்கிறோம். எங்களை நீங்கள் தடுக்க முற்பட்டால் இன்று உங்களுக்கு பிரச்சாரம் செய்ய முதல்வர் ஸ்டாலின் (ஒதியம்) வருகிறார் அதை எதிர்த்து எங்கள் கட்சியை சேர்ந்த 2000-க்கும் மேற்பட்ட தொண்டர்களை வரவழைத்து கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடத்துவோம் என்று கூறியதால் வேறு வழியில்லாமல் சென்று விட்டனர் திமுகவினர்.

தமிழகத்தில் நடிகர் விஜய் ரசிகர் மன்றம் இல்லாத கிராமமே இருக்க முடியாது. அந்த வகையில் ரசிகர் பட்டாளத்தை அழைத்துக் கொண்டு கிராமம் கிராமமாக துணிச்சலாக பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார் ரேவதி. மேலும் வாக்காளர்களிடம் எப்படி பேச வேண்டும் என்பதை தெரிந்து வைத்துக் கொண்டு கை தேர்ந்த அரசியல்வாதியை போல் ஓட்டு கேட்டு வருகிறார். இருந்தும் திமுக, அதிமுகவினரை போல் செலவு செய்யும் அளவிற்கு ரேவதியிடம் பொருளாதாரம் இல்லை. ஓட்டுக்கு காசு கொடுக்கவும் வழி இல்லை. தேர்தலில் நிற்க வேண்டும், தன் தலைவனை நம்பி எவ்வளவு பேர் ஓட்டு போடுகிறார்கள் என்பதை பார்க்க வேண்டும் என்கின்ற எண்ணத்தில் களத்தில் இருக்கும் ரேவதி, மூன்றாவது இடத்தை பிடிப்பார் என கள நிலவரம் சொல்கிறது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *