ஈரோடு
ஈரோடு நசியனூர் ரோடு நாச்சாயி டீக்கடை அருகில் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் கோபிநாத் பழனியப்பன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் அங்கு அந்தப் பகுதி மக்கள் உற்சாகமான வரவேற்பு அளித்தனர் ஏறத்தாழ 300க்கும் மேற்பட்ட பெண்கள் தங்கள் கைகளில் ஆரத்தி தட்டுகளை கையில் வைத்துக்கொண்டு அவரை வரவேற்றனர்.
ஏராளமான மக்களின் அன்பைப் பெற்ற ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் திரு கோபிநாத் பழனியப்பன் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று இந்த தொகுதி மக்களுக்காக அயராத உழைப்பேன் மக்களின் தேவைகளை தேடி வந்து செய்வேன் எனக் கூறி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்
அவருடன் காங்கிரஸ் மாவட்ட தலைவர் ராஜேஷ் ராஜப்பா ஊடகப்பிரிவு தலைவர் அர்சத் சிறுபான்மை பிரிவு துணைத் தலைவர் பாட்ஷா, மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியினர் திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் பி.கே பழனிச்சாமி எஸ்டிபிஐ கட்சி நிர்வாகிகள் விடுதலை சிறுத்தை கட்சியை நிர்வாகிகள் இந்திய முஸ்லிம் லீக் கட்சியின் நிர்வாகிகள் தேமுதிக கட்சி நிர்வாகிகள் மற்றும் அனைத்து கூட்டணி கட்சி தொண்டர்களும் உறுப்பினர்களும் மகளிர் அணியினரும் ஏராளமானோர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.