செய்தியாளர்:எஸ். திருபாலா அந்தியூர்
ஈரோடு மாவட்டம், அந்தியூர் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் எம் சிவபாலன் தொகுதியின் பல்வேறு இடங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
இந்த நிலையில், அந்தியூர் அருகே உள்ள நஞ்சமடைக்குட்டை, மொடாப்பாளி, கள்ளிமடை குட்டை, ஓடைமேடு உள்ளிட்ட இடங்களில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, உற்சாகத்துடன் அவரை வரவேற்ற பெண்கள் ஆரத்தி எடுத்தனர். மேலும் அவர்களது கோரிக்கைகளை கேட்டு அறிந்த வேட்பாளர் எம்.சிவபாலன், என்னை வெற்றி பெற செய்தால் நிறைவேற்றுவேன் என உறுதி அளித்தார். அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏஜி வெங்கடாசலம் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.