ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டம், அந்தியூர் சட்டமன்ற தொகுதி மலையனூர் கிராமத்தில், மலையாள கவுண்டர் சமூகத்தை சேர்ந்த மக்கள் எஸ்.டி., சான்றிதழ் வேண்டி தேர்தல் புறக்கணிப்பு செய்வதாக அறிவித்தனர்.

இதை அறிந்து ஈரோடு அதிமுக புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் ஏ கே செல்வராஜ், அந்தியூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர்கள் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ். ரமணீதரன், மாநில அம்மா பேரவை இணைச் செயலாளர் வீ. பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலையில், மலையனூர் மற்றும் கடைஈரட்டி கிராமத்திற்கு நேரில் சென்று மக்களை சந்தித்தனர்.

அதிமுக ஆட்சி அமைந்தவுடன் உறுதியாக சான்றிதழ் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் என கூறி பேச்சுவார்த்தை நடத்தினர். இந்நிகழ்வில் அந்தியூர் வடக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரநாயக்கர், *உச்சநீதிமன்ற வழக்கறிஞர் விஎன். சுப்ரமணியம் மற்றும் கூட்டணி கட்சியை சேர்ந்த விஜயகுமார், கிளைக் நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *