துறையூர்
திருச்சி மாவட்டம் துறையூர் நகர பகுதியில் திமுக நகர செயலாளர் மெடிக்கல் முரளி முன்னிலையில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் கே.வி.தங்கபாலு துறையூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் லெனின் பிரசாத்துக்கு “கை” சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.
இதில் நகர செயலாளர் மெடிக்கல் முரளி, ஒன்றிய செயலாளர்கள் வீரபத்திரன், அண்ணாதுரை, சிவ சரவணன், ஆதிதிராவிடர் நல குழு தலைவர் கஸ்டம்ஸ் மகாலிங்கம்,நகர மன்ற தலைவர் செல்வராணி மலர்மன்னன்,பொது குழு உறுப்பினர் கிட்டப்பா, மாவட்ட பிரதிநிதிகள் மதியழகன், கார்த்திகேயன், துணை செயலாளர் பிரபு, நகர்மன்ற உறுப்பினர் சுதாகர், வழக்கறிஞர் அணி மாவட்ட அமைப்பாளர் நரேஷ் குமார், சுற்றுச்சூழல் அணி மாவட்ட அமைப்பாளர் அம்மன் பாபு, வடக்கு மாவட்ட காங்கிரஸ் செயலாளர் சரவணன், நகர தலைவர் ராமநாதன்,வட்டார தலைவர் அரவிந்தன், இளைஞர் அணி பிரபு, ஸ்டுடியோ சசிகுமார், சிலம்பரசன் ,ப்ளக்ஸ் சதீஷ், அம்மன் பிரேம் மற்றும் கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.
வெ. நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்