ஏ.பி. பிரபாகரன் பெரம்பலூர், செய்தியாளர்.
பெரம்பலூர் நகர் பகுதியில் வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளர் தமிழ்ச்செல்வன்.
பெரம்பலூர். ஏப்.17 பெரம்பலூர் அதிமுக சார்பில் வேட்பாளராக நான்காவது முறையாக அறிவிக்கப்பட்டிருக்கும் இளம்பை. இரா. தமிழ்ச்செல்வன் கடந்த 15 நாட்களுக்கும் மேலாக தேசிய ஜனநாயக கட்சியில் உள்ள பாட்டாளி மக்கள் கட்சி, பாரதிய ஜனதா கட்சி, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், இந்திய ஜனநாயக கட்சி, புரட்சி பாரதம், புதிய நீதி கட்சி, நாயுடு பேரவை ஆகிய கட்சியினரோடு சூறாவளியாக சுழன்று பொது மக்களிடம் வாக்கு சேகரித்து வருகிறார்.
அந்த வகையில் முத்துகிருஷ்ணா மக்கள் மன்றத்தில் நடந்த குரும்ப கவுண்டர்கள் சங்க கூட்டத்தில் மாவட்ட தலைவர் ராஜாராம் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டார் இளம்பை.தமிழ்செல்வன். இம்முறை வேட்பாளர் தமிழ்ச்செல்வன் வெற்றி பெற வைக்க வேண்டுமென தீர்மானிக்கப்பட்டது. இதேபோல் பெரம்பலூர் நகரப் பகுதியில் உள்ள பள்ளிவாசலுக்கு சென்று இஸ்லாமியர்களிடம் ஓட்டு சேகரித்தார்.
ஆலம்பாடி ரோடு, திருநகர், டால்பின் நகர், வடக்கு மாதவி ரோடு, உழவர் சந்தை, ராம் தியேட்டர், காமராஜர் வளைவு, ரோஸ் நகர், ரோவர் ஆர்ச், புதிய பேருந்து நிலையம், கே ஜி எம் நகர், தீரன் நகர் ஆகிய பகுதிகளில் ஓட்டு சேகரித்தார். செல்லும் இடமெல்லாம் வேட்பாளர் இளம்பை. இரா. தமிழ்ச்செல்வனுக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
மேலும் 10 ஆண்டுகளுக்கு முன்பு சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது தொகுதியில் நிறைவேற்றிய திட்டங்களை பட்டியலிட்டு பொதுமக்களிடம் பேசினார். இம்முறையும் தன்னை தேர்ந்தெடுத்தால் உங்களுடைய குறைகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்வேன் என்றும், மேலும் ஐயா எடப்பாடியார் தலைமையில் ஆட்சி அமைந்தவுடன் அவர் அறிவித்த அனைத்து குடும்ப தலைவிக்கும் மாதம் ரூபாய் 2000 உதவித்தொகையும், அம்மா இருசக்கர வாகனமும் வாங்குவதற்கு 25 ஆயிரம் ரூபாய் மானியமாக வழங்கப்படும் என்றும், ஆண்களுக்கும், மகளிருக்கும் கட்டணமில்லா பேருந்து பயணத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்றும், 100 நாட்கள் வேலை வாய்ப்பு திட்டம் 150 நாட்களாக உயர்த்தப்படும் என்றும், அனைவருக்கும் அம்மா இல்லம் இலவச வீடு திட்டம் செயல்படுத்தப்படும் என்றும், ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் தொகுப்புடன் சேர்த்து ரூபாய் 1000 வழங்கப்படும் என்றும், நடைபாதை வியாபாரிகள் பெற்ற கூட்டுறவு வங்கிக் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்றும், முதியோர் உதவித்தொகை 2000 ஆக உயர்த்தி வழங்கப்படும் என்றும், மாணவர்களுக்கு கல்வி கடன் தள்ளுபடி செய்யப்படும் என்றும், குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆண்டுக்கு மூன்று கேஸ் சிலிண்டர்கள் வாழ்வாதார உதவியாக வழங்கப்படும் என்றும், அத்தனை நலத்திட்ட உதவிகளையும் உடனடியாக நிறைவேற்றப்படும் என்றும் வாக்குறுதி கொடுத்தார்.