மதுரை கள்ளழகர் கோவில் சித்திரை திருவிழாவுக்கு முகூர்த்தக்கால் நடப்பட்டது 1-ந் தேதி வைகையில் எழுந்தருள்கிறார் மதுரை கள்ளழகர் கோவில் சித்திரை திருவிழாவுக்கு . முகூர்த்தக்கால் தல்லாகுளம் பெருமாள் கோவிலில் நடப்பட்டது.
மதுரையை அருகே அழகர் கோவிலில் உள்ள கள்ளழகர் திருக்கோவில் சித்திரை திரு விழாவை முன்னிட்டு,கடந்த ஜனவரி மாதம் ஆயிரம் பொன் சப்பரத்துக்கு முகூர்த்த விழா நடந்தது.
இதன் அடுத்த நிகழ்வாக கள்ளழகர் கோவிலின் உப கோவிலான மதுரை தல்லா குளம் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலின் முன்பும். ராஜகோபுரம் முன்பும் என இருஇடங்களில் கள்ளழ கர் கோவில் சித்திரை திருவிழாவுக்கு முகூர்த்தக் கால் நடப்பட்டன
அப்போது, அழகரின் ஆயி ரம் பொன் சப்பரத்தில் இணைக்கப்படும் யாளி திருமுகத்திற்கு அலங்காரம் செய்யப்பட்டு, அழகர் மலைநூபுர கங்கை தீர்த்தத்தால் பூஜைகள் நடத்தப்பட்டன. வேத மந்திரங்கள் ஒலிக்க தீபாராதனை நடந்தது.
தொடர்ந்து அழகர் எழுந்தருளும் வைகை ஆறு தேனூர் மண்டபத்தின் முன்பாகவும் முகூர்த்தக்கால் நடும் விழா நடந்தது. இந்த ஆண்டு அழ கர் 494 மண்டகபடிகளில் எழுந்தருளி அருள்பாலிக்கி றார். எனவே அந்த மண்ட கப்படிகளிலும் ஏற்பாடுகள் தொடங்கின.
அழகர் கோவில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகள் வருகிற 29-ந்தேதி முதல் தொடங்குகிறது. அன்று மாலையில் கண்டாங்கிபட்டு உடுத்தி கள்ளழகர் திருக்கோ லத்தில், நேரிக்கம்பு கையில் ஏந்தி பக்தர்கள் புடைசூழ வும், அதிர்வேட்டுகள் முழங்க வும் மதுரைக்கு பெருமாள் புறப்பட இருக்கிறார் வருகிற 30-ந் தேதி மூன்று மாவடியில் அழகரை மதுரை மக்கள் எதிர்க்கொண்டு வர வேற்கும் எதிர்சேவை நடக்கிறது.
முத்திரை பதிக்கும் நிகழ்ச்சியாக சித்திரை திருவிழாவின் கள்ளழகர், மதுரை வைகை ஆற்றில் மே 1-ந்தேதி அதி காலை 5.35 மணிக்கு மேல் 5.55 மணிக்குள் தங்கக்குதிரை வாகனத்தில் வீற்றிருந்து எழுந்தருள்கிறார். இந்த கொள்ளா காட்சியை 15 லட்சத்துக்கும் அதிகமான பக்தர் கள் திரண்டு தரிசிப்பது வழக்கம்.
மறுநாள் கருட வாகனத் தில் தேனூர் மண்டபத்தில் மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளித்தல், அன்றிரவு ராமராயர் மண்டபத் தில் விடிய, விடிய தசாவதார திருக்கோலங்களில் அழகர் காட்சி அளித்தல், 3-ந் தேதி மன்னர் சேதுபதி மண்டபத் தில் இரவு பூப்பல்லக்கு விழா நடைபெறுகிறது. 4-ந் தேதி மதுரையில் இருந்து அழகர் புறப்பட்டு, 5-ந் தேதி இருப்பிடம் சேர்கிறார்..